அஜித்குமார் நடிப்பில் உருவான ஆக்‌ஷன் த்ரில்லர் படமான  'வலிமை', தமிழ்நாடு முழுவதும் நேற்றுமுன்தினம் வெளியாகி சாதனையை படைத்தது. இப்படம் முதல் நாளில் சுமார் 28.25 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் சர்க்கார் படத்திற்கு அடுத்தபடியாக தமிழ்த் துறையில் அதிகம் வசூல் செய்த இரண்டாவது பெரிய படமாக உள்ளது. எச் வினோத்தின் வசூல் ரீதியாக வரவேற்பை பெற்றாலும், சில விமர்சனைகளையும் சந்தித்து வருகிறது.


குறிப்பாக இரண்டாம் பாதி நீளமாக உள்ளதாக ரசிகர்கள் படக்குழுக்கு கோரிக்கை வைக்க, ரசிகர்கள் இந்த கருத்து அஜித் குமார், போனி கபூர், எச் வினோத் மற்றும் ஒட்டுமொத்த வலிமை குழுவின் காதுகளை எட்டியுள்ளது.  இதனைத்தொடர்ந்து, படக்குழு தானாக முன்வந்து படத்தின் காட்சிகளை குறைக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, தமிழில் 12 நிமிடங்கள் குறைக்கப்படுவதாகவும், இந்தியில் 15 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்று முதல் அனைத்து திரையரங்குகளிலும் புதிதாக கட் செய்யப்பட்ட படத்தை திரையிட இருப்பதாகவும் தெரிகிறது. 




இந்தநிலையில், தற்போது வலிமை படத்தின் மீது மீண்டும் ஒரு விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 1993 ம் ஆண்டு சத்யராஜ் நடிப்பில் மிகப்பெரிய வெற்றிபெற்ற 'வால்டர் வெற்றிவேல்' திரைப்படத்தின் காப்பிதான் இந்த வலிமை திரைப்படம் என்று பூதம் கிளம்பியுள்ளது. 


பத்திரிகையாளரும் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவருமாகிய பயில்வான் ரங்கநாதன் வழக்கமாக நடிகர், நடிகைகள் குறித்து சர்ச்சையாக பேசுபவர். 80களுக்கு முன்பிருந்தே அவர் சினிமாவில் வலம் வருபவர் என்பதால், அப்போதைய சினிமா பிரபலங்களுடன் தனக்கு இருந்த நெருக்கத்தை வைத்து, அவர்கள் பற்றிய தகவல்களை அவ்வப்போது பகிர்வார். தற்போது வலிமை படம் பார்த்துவிட்டு விமர்சனம் என்ற பெயரில் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். அதில், வால்டர் வெற்றிவேல் படமும், வலிமை படமும் கிட்டத்தட்ட ஒன்றுதான். 


நேர்மையான காவல்துறை அதிகாரியான நாயகன் ஒரு கட்டத்தில் அப்பாவி போல் இருக்கும் தன் தம்பியே இந்த கும்பலில் ஒருவன் என்று தெரிந்து என முடிவு எடுக்கிறார் இதுவே வால்டர் வெற்றிவேல் கதை. அதையேதான் எச்.வினோத் காப்பி அடித்துள்ளார் என்று பயில்வான் ரங்கராஜன் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு கோவமடைந்த அஜித் ரசிகர்கள் தற்போது பயில்வான் ரங்கராஜனை கழுவி கழுவி ஊத்தி வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண