Watch Video : அஜித்தின் ரீல் மகள் நடத்திய ஆடம்பர போட்டோஷூட்... நடிகை அனிகாவின் 'ஆஹா' வீடியோ!

நடிகை அனிகா தமிழைத் தொடர்ந்து மலையாளத்திலும், முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.

Continues below advertisement

கோலிவுட்டின் முன்னணி நடிகரான அஜித் இயக்கத்தில் வெளியான, என்னை அறிந்தால் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் அனிகா. இதனையடுத்து அஜித்தே அவரது அடுத்த படமான விஸ்வாசம் படத்தில் தனது மகள் கதாபாத்திரத்தில் அனிகா தான் நடிக்க வேண்டும் என்று கேட்டு வாங்கினார்.

Continues below advertisement

இந்த இரண்டு படங்கள் மூலம் அவருக்கு கோலிவுட்டில், கிடைத்த வரவேற்பால் அடுத்ததாக ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட குயின் வெப் தொடரில் இளம் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்தார். கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய இந்த தொடரின் அவரின் நடிப்பு பலராலும் பேசப்பட்டது. 

தமிழைத் தொடர்ந்து மலையாளத்திலும், முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். இவர் ஏகப்பட்ட ஃபோட்டோ ஷூட் மற்றும் வீடியோ போன்றவற்றை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அதில் கவர்ச்சியாக இவர் ஃபோட்டோ நடத்தி சமீப காலமாக புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியிட்டு வருகிறார். இவர் வெளியிடும் இன்ஸ்டா பதிவுகளை பார்ப்பதற்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு.

எப்போது சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் அனிகா தனது புகைப்படங்களை வெளியிடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர். அந்தந அடிப்படையில் தற்போது, இவர் போட்டோஷூட்காக எடுக்கப்பட்ட வீடியோ காட்சியை பதிவிட்டுள்ளார். கோல்டன் எல்லோ கலரில் மேக்கப் செய்வது, சுவரில் சாய்ந்து போட்டோக்கு போஸ் கொடுப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. 

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

Continues below advertisement
Sponsored Links by Taboola