தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல தனியார் தொலைக்காட்சியில் குழந்தைகளுக்கான ஷோ ஒன்று நடக்கிறது. வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில், சமீபத்தில் ஒளிபரப்பான குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் குழந்தை ஒன்று பெரியார் வேடமிட்டு நடித்தது. அந்த குழந்தையுடன் பல குழந்தைகளும் நடித்திருந்தனர். அதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், தூத்துக்குடியைச் சேர்ந்த வெங்கடேஷ்குமார்பாபு என்பவர் தனது முகநூல் பக்கத்தில், பெரியார் வேடமிட்டு குழந்தையை கண்டித்து மிகவும் கொடூரமான பதிவொன்றை பதிவிட்டிருந்தார். மேலும், பெரியார் வேடமிட மற்ற குழந்தைகளுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் பயம் வரவேண்டும் என்றும் பதிவிட்டிருந்தார். அவரின் இந்த பதிவிற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
மேலும் படிக்க : Crime: மரத்தில் தலைகீழாக தொங்கவிட்டு நாய்க்குட்டி கொலை.. மூன்று நாய்க்குட்டிகள் எரிப்பு.. சீரியல் சைக்கோ கொலையாளியை தேடும் போலீசார்
அவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த வெங்கடேஷ்குமார் பாபுவை கயத்தாறு காவல்துறையினர் தந்தை பெரியார் வேடமிட்ட குழந்தையை அடித்துக்கொன்று பொது இடத்தில் தொங்கவிட வேண்டும் என்று மக்களிடம் பீதியும், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டதற்காக 153(ஏ), 505 (1). 506(1) ஐ.பி.சி. மற்றும் செக்டார் 67 ஐ.டி. சட்டப்படி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வெங்கடேஷ்குமார் பாபு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தந்தை பெரியார் வேடமிட்ட குழந்தையையும், அந்த குழந்தையுடன் சேர்ந்து நடித்த குழந்தையையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளாக பெரியார் சிலையை சேதப்படுத்துவதும், பெரியாருக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் கருத்து பதிவிடுவதும் அதிகரித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : Crime: சிகிச்சைக்கு வரும் பெண்கள் டார்கெட்! இதுவரை 80 பேர்! 35 ஆண்டுகள்... பகீர் கொடுத்த கொடூர டாக்டர்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்