அப்பாய்மெய்ண்ட் தேவையில்லை


இது குறித்து பிஹைண்ட் வுட்ஸ் சேனலுக்கு பேட்டியளித்த அவர், “ கலைஞர் எனக்கு மிகவும் பிடிக்கும். அப்பாய்மெய்ண்ட் வாங்காமல் நான் அவரை 5, 6 முறை சந்தித்து இருக்கிறேன். ஹீரோவாக நடித்தப்பிறகும் கூட, அவர் வீட்டிற்கு முன்னால் போய் நிற்பேன். அப்போது  ஒரு முறை அவரது உதவியாளர் அப்பாய்மெய்ண்ட் வாங்கவில்லையே என்று கூறினார்.


நான் வெளியில் வந்தேன்,அதனால் அவரை பார்த்துவிட்டு போக வந்தேன் என்று கூறினேன். அப்போது கலைஞர்  படியில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்தார். உடனே அவர் என்னிடம் பேசிக்கொண்டிருந்த  சண்முக நாதனிடம், அவர் யார் என்று தெரியுமா.. ஏன் அவரை வெளியே உட்கார வைத்திருக்கிறாய் என்றார். தொடர்ந்து என்னிடம் வந்த கலைஞர் என் தோள் மீது கைப்போட்டு, கார் வரைக்கும் என்னோடு வந்தார். அப்படிதான் என்னோடு அவர் பழகி வந்தார். 


 


 



வித்தியாசமான கிப்ட்


மு.க.ஸ்டாலின் நான் மேயராக இருந்த போதிலிருந்தே எனக்கு நல்ல பழக்கம். அப்போதிலிருந்தே அவரது செயல்பாடுகளை நான் கவனித்து வருகிறேன். தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்னால், நான் ஒரு கிப்ட் பாக்ஸை ரெடி செய்திருந்தேன். அதில் ஸ்டாலினின் உறுதிமொழிகள் அடங்கிய பேப்பர் ரோல், உதயநிதி ஸ்டாலினால் ஃபேமஸ் ஆன குட்டி எய்ம்ஸ் செங்கல், ஸ்டாலினின் முகம்  பொருந்திய சில்வர் காய்ன் உள்ளிட்டவற்றோடு, பாக்ஸை துறந்தால் ஸ்டாலின்தான் வராரு பாடல் ஒலிப்பது போல வடிவமைத்து இருந்தேன். இப்படி 250 கிப்ட் பாக்ஸூகளை ரெடி செய்து திமுகவை சேர்ந்த முக்கியமான நபர்களுக்கு அனுப்பி வைத்தேன். உதயநிதி ஸ்டாலினுக்கு எய்ம்ஸ் செங்கல் இருக்கும் வகையில் ஒரு விருதை வடிவமைப்பு செய்து அவருக்கு கொடுத்தேன். அப்படி ஒரு வெறியன் நான்” என்று பேசினார். 


1991 ஆம் ஆண்டு வெளியான ‘ஆத்தா உன் கோயிலிலே’ படத்தில் நடித்தது மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார் நடிகர் செல்வா.  தொடர்ந்து ‘தம்பிக்கு ஊருக்கு புதுசு’ ‘கிழக்கு வீதி’  ‘செண்பகத் தோட்டம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த இவர் மிஷ்கினின்  ‘யுத்தம் செய்’  ‘முகமூடி’ ‘ஈட்டி’ அண்மையில் வெளியான வலிமை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.