விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘ராஜா ராணி’ சீரியலுக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு அனைவரும் அறிந்ததுதான். இந்த சீரியலில் சஞ்ஜீவும்
ஆல்யா மானசாவும் ஜோடியாக நடித்தனர். நடித்துக்கொண்டிருந்த போதே காதலில் விழுந்த இந்த ஜோடி திருமணமும் செய்து கொண்டது.இவர்களுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு  ஐலா என்ற பெண் குழந்தை பிறந்தது.


ராஜா ராணி சீரியலுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து ராஜா ராணி 2 தற்போது ஒளிப்பரப்பாகி வருகிறது. இதில் ஆல்யா கதாநாயகியாக நடித்து வரும் நிலையில், நாயகனாக சித்து நடித்து வருகிறார். இதற்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில்  ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில், சீரியலில் ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.






அது என்னவென்றால் சீரியலில் சந்தியா கதாபாத்திரத்தில் ஆல்யா நடித்து வந்த நிலையில், அவர் இராண்டாவதாக முறையாக  கர்ப்பமாகி உள்ள நிலையில் சீரியல் இருந்து விலகுகிறாராம். இன்ஸ்டாகிராம் உரையாடலில் ரசிகர்களிடம்  உரையாடிய ஆல்யாவிடம் ராஜா ராணி சீரியலில் இருந்து விலகுகிறீர்களா என்று கேட்ட போது ஆம் என்று பதிலளித்திருக்கிறார். இந்த நிலையில் அவருக்கு பதில் புதிய நடிகை இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் நடிக்கும் காட்சிகள் இன்னும் சில நாட்களில் ஒளிப்பரப்பாகும் என சொல்லப்படுகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண