காதலர் தின வாரத்தில் கொண்டாடப்படும் கிஸ் டே-வை கிண்டலடித்து இணையத்தில் பல்வேறு மீம்ஸ்கள் வைரலாகியுள்ளன. நாளை உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், அதனை முன்னிட்டு கடந்த 7ம் தேதி முதல் காதலர் தின வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஆறு நாட்களாக முறையே ரோஸ் டே, ப்ரோபோஸ் டே, சாக்லேட் டே, டெடி டே, ப்ராமிஸ் டே, ஹக் டே ஆகியவை கொண்டாடப்பட்டுள்ளன. அதன் வரிசையில் இன்று கிஸ் டே கொண்டாடப்படுகிறது.
கிஸ் டே:
முத்தம் என்பதை மேம்போக்காக சிலர் காமத்தில் சேர்த்து விடுகின்றனர். ஆனால், அடிப்படையில் அது ஒரு அன்பின் வெளிப்பாடு தான். கணவன் - மனைவி, காதலன் - காதலர்களுக்கு மட்டும் தான் இந்த கிஸ் டே என்பது கிடையாது. தன் பால் அன்பு கொண்ட அம்மா, அப்பா, சகோதரன், சகோதரி என பல தரப்பட்ட உறவுகளுக்கும், தனது அன்பை வெளிப்படுத்தும் விதமாக எந்தவொரு நபரும் முத்தமிடலாம். இதனை கொண்டாடும் விதமாக தான், இந்த நாள் கிஸ் டே-ஆக கொண்டாடப்படுகிறது. இதை உணராத சிலர் முத்தத்தை ஒரு சிலருக்கானது மட்டுமே என சித்தரிக்க, அதற்கு வாய்ப்பு கிடைக்காத பலரோ கிஸ் டே-வை கிண்டலடித்து சமூக வலைதளங்களில் பல்வேறு மீம்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.
வைரலாகும் மீம்ஸ்கள்: