இசை என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் அபரிமிதமான பங்கினை வகித்து வருகிறது; பல முன்னணி இசை கலைஞர்கள், அடையாளப்படுத்தப்படும் இன்றைய சூழலில் பல தனிய இசை கலைஞர்களும் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றனர். அப்படி அடையாளப்படுத்தப்பட்டவர்களில் ஒருவர்தான் வைஷாக்.
ஓர் அழகிய வேளையில் அவருடன் பேசுகையில்...




1.அஜித்தின் துணிவு திரைப்படத்தில் இரண்டு பாடல்கள் ஒரே படத்தில்  எழுதி இருக்கும் அனுபவத்தை பற்றி கூறுங்கள்?


'காசே தான் கடவுலடா' சாங் ஒரே நைட்ல அனுப்புனேன் , அது வினோத் சார்-க்கு ரொம்ப புடிச்சுருந்தது. ஜிப்ரான் சார்க்கு ரெக்கார்டு பண்ணி காமிச்சேன், நல்லாயிருக்கு ரிலீஸ் அப்பறம் பேசிக்கலாம் அப்படின்னு சொன்னாங்க,  அதுக்கு அப்பறம் 'எதுவும் கிடைக்கலைன்னா' சாங் சாண்டி மாஸ்டர் கூட பண்ணிருந்தேன், அந்த பாட்ட நான் ஜிப்ரான் சாருக்கும்,  வினோத் சாருக்கும் அனுப்பியிருந்தேன். அவங்க பாட்ட பாத்துட்டு என்ன நெனச்சாங்கனு தெரியல, ஜிப்ரான் சார் கால் பண்ணி, வைஷாக் ஸ்டூடியோ வரமுடியுமானு கேட்டாங்க, நானும் ஸ்டூடியோ போனேன் ஒரு ட்ராக் வாசிச்சு காமிச்சு, எப்படி இருக்கு வைஷாக்னு கேட்டாங்க,  அப்படியே செலிப்ரேஷன் மோட்ல பாட்டு கேட்டாங்க துணிவு படத்துல ஒரு இன்ட்ரோ சாங் போல வேணும்னு கேட்டாங்க ஜிப்ரான் சார் லிரிக்ஸ் ரொம்ப சில்லா ஜாலியா அப்படி இருக்கணும்னு கேட்டாரு. இந்த பாட்டு இப்படித்தான் டேக் ஆஃப் ஆச்சு. ரெண்டு, மூணு நாள்ல நாங்க இந்த பாட்டோட ரெக்கார்டிங் முடிச்சுட்டோம்.


                     

 



 2. இசையமைப்பாளர் ஜிப்ரான் அவரோட மியூசிக், அனிருத் ஓட வாய்ஸ் இவங்களோட காம்போல உங்க வரிகள் அதுல இடம்பெற்று இருக்கு அந்த தருணம் பத்தி கொஞ்சம் சொல்லுங்க?


டாப் ஆக்டர் ஓட ஒர்க் பண்ணனும்னு நமக்கு ஒரு ட்ரீம் இருக்கும் அதவிட ரெண்டு இண்டஸ்ட்ரி டாப்லீடிங் கம்போஸர் ஒர்க் பண்ற போது (as a budding) எனக்கு அதுல ஸ்பேஸ் கிடைச்சு இருக்கும் போது ரொம்ப கிரேட் புல்லா அதை நினைக்கிறேன். இந்த நிகழ்வுகள் எல்லாம் என்னோட ட்ரீம்ல கூட இல்லாத ஒன்னு, அந்த வகையில நானும் இதுல ஒரு பார்ட்டா இருக்ககேன்றது எனக்கு ரொம்ப சந்தோஷம். 




 3.அஜித் சாரோட உங்க போட்டோ, சோஷியல் மீடியா பகிர்ந்து இருந்தீங்க( Nothing has made my birthday this special) அப்படின்னு குறிப்பிட்டிருந்தீங்க, அதற்குப் பின்னாடி உள்ள தருணங்கள் பற்றி கொஞ்சம் ஷேர் பண்ணிக்கோங்க?


 எனக்கு முதல்ல அஜித் சார் மீட் பண்ண முடியுமான்னு தெரியல. எல்லாரும் என்கிட்ட கேட்டுட்டே இருந்தாங்க சார் பாத்துட்டீங்களா அப்படின்னு, அது ஏன்னா அவர பாக்கவே முடியாது அப்படின்ற ஒரு சோன் இருக்கும். இண்டஸ்ட்ரிலையே ரொம்ப பேரால பாக்கப்படாத ஒரு ஆளு அஜித் சார். அவரு  டைம் கொடுத்து நான் அவர பார்த்தது எனக்கு மிகப்பெரிய கனவு. நான் வினோத் சார் கிட்ட சொன்னேன் சார் எனக்கு கனவெல்லாம் வருது சார் நெஜமாவே அஜித் சார் பாக்கணும் சொல்லிட்டாங்களா அப்படின்னு.


அவரு ஒருநாள் செட்டுக்கு வாங்க வைஷாக், நம்ம பார்க்கலாம், அப்படின்னு சொல்லி இருந்தாங்க. நான் சார போய் பாக்க போனேன்,  நம்மளை பார்க்க வரவங்கள எப்படி  வரவேற்பு கொடுத்து பாத்துப்பாங்கன்னு  நம்ப எல்லாருக்கும் தெரியும் , அதுல எந்த மாற்றமுமே இல்ல சாரும் என்னை அப்படித்தான் பார்த்துக்கிட்டாங்க. அப்புறம் திடீர்னு பின்னாடி இருந்து ஒருத்தர் சத்தம் போட்டாங்க இவருக்கு இன்னைக்கு பர்த்டே அப்படின்னு, என்னால அந்த மொமண்ட மறக்கவே முடியாது அது பிளஸ்டா இருந்துச்சு, எனக்கு அந்த மொமெண்ட்ல கண்ணுல தண்ணியே வந்துருச்சு எனக்கு 'முகவரி' அந்த சீன்ஸ் எல்லாம் ஞாபகம் வந்துச்சு.


அப்புறம் சார் கிட்ட பேசினேன் இன்னும் நல்லபடியா நீங்க மேல மேல போய்க்கிட்டே இருக்கணும் வைஷாக், நிறைய பாடல்கள் எழுதணும் நம்ப மேல போகணும் நெனச்சாலே நிறைய தடங்கள் வரும் அது எல்லாத்தையும் சரி பண்ணி மேல போய்க்கிட்டே இருக்கணும்  ஒரு பர்த்டே விஷ், ஒரு போட்டோ இதுக்கு மேல என்ன வேணும் எனக்கு.


4. இப்போ வளர்ந்து வர தனி இசை கலைஞர்கள் எல்லாம் உங்கள ஒரு ஒரு அடையாளமா பாக்குறாங்க அது நீங்க கவனிச்சீங்களா?


 அத நான் எல்லா இடத்திலயுமே பாக்குறேன். எனக்கு அது மோட்டிவேஷன் அதையும் தாண்டி, என்ன பாக்கும்போது அவங்க ஓடி வந்து என்னை அரவணைச்சுக்கிறாங்க.  ஒரு ஆர்டிஸ்ட் அதெல்லாம் தாண்டி அவங்க என்கிட்ட வந்து பேசும்போது பர்சனலா கனெக்ட் ஆகுறாங்க. என்ன பார்த்ததும் என்கிட்ட பேசுவாங்க, உங்க சாங்ஸ் நல்லா இருக்கு ணா, நான் டெய்லி கேட்கிற பாட்டு ணா அப்படின்னு சொல்லும்போது, அது நான் அவங்க கூட கனெக்ட் ஆயிருக்க விதம். எப்பவுமே கனவு காணும் போது ஒரு விஷயம் சொல்லுவாங்க. சினிமா மாதிரி நினைக்காத டா, இது சினிமா கிடையாது இது லைஃப் அப்படின்னு, நம்மளோட பொறுமை , உழைப்புனால அது நடக்க வாய்ப்பு இருக்கு அப்படின்னு என் மூலியமா அவங்களுக்கு ஒரு ஹோம் கிடைக்குது  (its become practical), அந்த வகையில நான் இந்த ஸ்டேஜ்க்கு வந்திருக்கேன் அது அவங்களுக்கு ஒரு ஹோப் கொடுக்குது, எனக்கு அது ஒரு பெரிய ரெஸ்பான்ஸ்பிலிட்டி நான் அத தக்க வச்சுக்கணும். 


அதையும் மீறி அவங்க என்ன ஒரு பர்சனல் ஸ்டேஜ் குள்ள வச்சுக்கிறாங்க. எனக்கு இது ரொம்ப பெருமையா இருக்கு. ஒரு ஆர்டிஸ்டாவும் ஒரு மனிதனாவும் நான் அதை ரொம்ப மதிக்கிறேன்.




5. ஒரு இடத்துக்கு போகும்போது உங்கள் ரசிகர்கள் உங்கலளை அரவணைச்சிக்கும் அந்தத் தருணத்தில, நீங்க கடந்து வந்த பாதைகள் உங்களுக்கு ஏதாவது நினைவுக்கு வந்து இருக்கா?


Phoenix mall அங்க நிறைய நிகழ்ச்சிகள் நடக்கும். அதைப் பார்க்கும்போது நம்ப பாட்டு இங்க ஓடாதா, நம்ப இங்க பெர்ஃபாம் பண்ண முடியாதா அப்படின்னு ஏங்கி இருக்க நாட்கள் உண்டு. இப்போ நான் அந்த இடத்துல பர்ஃபாம் பண்ணும் போது என் கூட சேர்ந்து ஒரு கிரவுட் பாடிட்டு இருக்கு, என்னோட சாங் அந்த மால் ஃபுல்லா ஒளிச்சிட்டு இருக்கு.சில தருணத்தில் எனக்கு அவ்ளோ வலி இருந்துச்சு, நான் அவ்வளவு கஷ்டத்தை எல்லாம் கடந்து வந்ததேன், நான் கடந்து வந்த பாதைய நினைக்கும்போது  நான் கஷ்டப்பட்ட லைப்ப மறக்கிற அளவுக்கு இப்போ நான் இருக்கிற மொமெண்ட் ஃபுல் ஆயிருக்கு.