தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வெள்ளியும் புது்படம் ரிலீசாவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் கோலிவுட் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக வெளி வந்திருப்பது பெருசு திரைப்படம். தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக வலம் வரத் துடிக்கும் வைபவ் இந்த படத்தின் நாயகனாக நடித்துள்ளார். 


பெருசுக்கு வரவேற்பு:


இந்த படத்தை இளம் இயக்குனர் இளங்கோ ராம் இயக்கியுள்ளார். வைபவுடன் அவரது சகோதரர் சுனில் நடித்துள்ளார். மேலும், சாந்தினி, ரெடின் கிங்ஸ்லி, பால சரவணன் ஆகியோர் நடித்துள்ளனர். 


முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு பிரபலங்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், என்ன ஒரு கேளிக்கை நிறைந்த பொழுதுபோக்கு. அதிகளவு சிரப்பு. என் அருமையான நண்பர் வைபவிற்கும், படக்குழுவிற்கும் வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.






பிரபல இயக்குனர் அருண் மாதேஸ்வரன் தனது எக்ஸ் பக்கத்தில் சிரிப்பு என்பது சிறந்த மருந்து, பெருசு படமே அதற்கான மருந்துச்சீட்டு. இவ்வளவு தைரியமாகவும், புத்திசாலித்தனமாகவும் இந்த படத்தை எடுத்ததற்கு படக்குழுவிற்கு வாழ்த்துகள். 


இயக்குனர் ரத்னகுமார் தனது எக்ஸ் பக்கத்தில், முதல் ஃப்ரேமில் இருந்தே ரசிக்க வைக்கும் திரைப்படம். வைபவ் - சுனில் சகோதரர்கள் அதை சிறப்பாக செய்துள்ளனர் என்று பதிவிட்டுள்ளார். 


பிரபல தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது எக்ஸ் பக்கத்தில், அடல்ட் வகை காமெடி படங்களில் சிறப்பான படம். எப்படி சிலவற்றை கையாளப் போகிறார்கள் என்பதை பார்க்க ஆர்வமாக உள்ளது. இந்த வாரத்திற்கு சிறந்த பொழுதுபோக்கு இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 


படத்தின் ஹீரோயின் மகிழ்ச்சி:


படத்தில் நடித்துள்ள சாந்தினி, ரசிகர்கள் திரையரங்கில் தரும் வரவேற்பு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த வார இறுதியில் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இயக்குனர் புஷ்கர் காயத்ரியும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரபலங்கள் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.