இன்று வெளியான தனது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் பட ட்ரெய்லரை ஜாலியாக நடனமாடி, விசிலடித்து வடிவேலு பார்த்து ரசிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் லைக்ஸ் அள்ளி வருகிறது.

Continues below advertisement


சுமார் 4 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ’வைகைப் புயல்’ வடிவேலு நடிக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.


'இந்தியாவின் முதல் நாய் கடத்தும் நபர்' என ட்ரெய்லரில் அதகளமாக வடிவேலு அறிகுகமாகும் நிலையில், வடிவேலு ரசிகர்களுக்கு கலர்ஃபுல் காமெடி விருந்தாக இப்படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரமான நாய் சேகர் எனும் லீட் ரோலில் நடித்துள்ளார். இவரின் மகளாக விஜய் ஸ்டார் மற்றும் பாடகியான சிவாங்கி கிருஷ்ணகுமார் நடித்துள்ளார்.


மேலும் ரெட்டின் கிங்ஸ்லி, ஷிவானி நாராயணன், ஆனந்தராஜ், முனீஷ்காந்த், ஆர்.ஜே. விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு, யூடியூபர் பிரஷாந்த் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


இப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லரை படக்குழுவுடன் பார்த்து ரசித்த வடிவேலு, விசிலடித்தும் நடனமாடியும் ஜாலியாகக் கொண்டாடும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை வடிவேலு ரசிகர்கள் பகிர்ந்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


 






சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில், முன்னதாக இந்தப் படத்தின் முதல் பாடலாக ’எங்க அப்பத்தா’ பாடல் வெளியாகி இணையத்தில் ஹிட் அடித்தது. இந்தப் பாடல் வரிகளை துரை, அசல் கோலர் இணைந்து எழுதியுள்ளனர். நடிகரும், பிரபல கொரியாக்ராஃபருமான பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார்.


இப்படத்தை முன்னதாக நவம்பர் 11ஆம் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் படம் வெளியாகாமல் தள்ளிப் போன நிலையில் தற்போது படம் வரும் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.