சுமார் 4 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ’வைகைப் புயல்’ வடிவேலு நடிக்கும் திரைப்படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். இப்படத்தின் ட்ரெய்லர் சிறிது நாட்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.


கலர்ஃபுல் காமெடி விருந்தாக நாய் சேகர்:


வைகைப் புயல் என செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படுபவர் வடிவேலு. 1999-2015 வரை காமெடியில் கலக்கி, ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த இவர், பல ஆண்டுகளுக்கு பிறகு கம்பேக் கொடுத்துள்ளார். நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தின் ட்ரைலரில், இந்தியாவின் முதல் நாய் கடத்தும் நபர்' என ட்ரெய்லரில் அறிமுகமாகியிருக்கிறார் நமது வைகைப்புயல். பல ஆண்டுகளாக பழைய வடிவேலுவை பார்க்க வேண்டும் என தவமாய் தவமிருந்த ரசிகர்களுக்கு காமெடி விருந்தாக இப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரமான நாய் சேகர் எனும் லீட் ரோலில் நடித்துள்ளார். இவரின் மகளாக விஜய் டிவி பிரபலம் மற்றும் பாடகியான சிவாங்கி கிருஷ்ணகுமார் நடித்துள்ளார். மேலும் ரெட்டின் கிங்ஸ்லி, ஷிவானி நாராயணன், ஆனந்தராஜ், முனீஷ்காந்த், ஆர்.ஜே. விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு, யூடியூபர் பிரஷாந்த் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 




சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில், முன்னதாக இந்தப் படத்தின் முதல் பாடலாக ’எங்க அப்பத்தா’ பாடல் வெளியாகி இணையத்தில் ஹிட் அடித்தது. இந்தப் பாடல் வரிகளை துரை, அசல் கோலர் இணைந்து எழுதியுள்ளனர். நடிகரும், பிரபல கொரியாக்ராஃபருமான பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார்.


வடிவேலுவின் புதிய வீடியோ!


நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், வைகைப் புயலின் புதிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. 









சில நாட்களுக்கு முன்னர் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலான பாடல் கச்சா பாதாம். இந்த பாடலுக்கு பலரும் நடனமாடி தங்களது வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில், நடிகர் வடிவேலுவும் இப்பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த வீடியோவை லைகா ப்ரோடக்ஷன்ஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில் வடிவேலுவின் நடன வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகிவரும் நிலையில், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பும் எகிறி வருகிறது.