எஸ்.ஜே. முதன்மை கதாபாத்திரமாக நடித்திருக்கும்  ‘வதந்தி’ வெப் சீரிஸின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது 


 


                                   


இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி  தயாரிப்பில், அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான  ‘சுழல்’ வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வரவேற்பை தொடர்ந்து இவர்களது தயாரிப்பில் அடுத்ததாக உருவாகி இருக்கும் வெப் சீரிஸ்  ‘ வதந்தி’. எஸ்.ஜே.சூர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த வெப் சீரிஸை முன்னதாக லீலை தொடரை இயக்கி இருந்த ஆன்ட்ரியூ லூயிஸ் இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வருகிற டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாக உள்ள இந்த வெப் சீரிஸில் லைலா, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.