வாணி போஜன் :
சின்னத்திரை நடிகையாக இருந்து இன்று வெள்ளித்திரையில் கால் பதித்து கலக்கி வருபவர் நடிகை வாணி போஜன். ஒரு காலக்கட்டத்தின் சின்னத்திரை நடிகைகள் என்றாலே திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பே கிடைக்காது. அப்படியே இருந்தாலும் அது சிறு சிறு கதாபாத்திரங்களாக இருக்குமே தவிர கதாநாயகியாக யோசித்து கூட பார்க்க முடியாது. ஆனால் அதையெல்லாம் முறியடித்த வெகு சில நடிகைகளுள் வாணி போஜனும் ஒருவர். . சின்னத்திரை நயன்தாரா என கொண்டாடப்படும் வாணி போஜனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.ஓ மை கடவுளே திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்த அவர், மகான் படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பிறகு சமீபத்தில் அருண் விஜய்யுடன் இணைந்து தமிழ் ராக்கர்ஸ் வெப் தொடரிலும் நடித்திருந்தார்.
ஹாட் பக்கங்களில் புகைப்படங்கள் :
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் வாணி போஜன் கவர்ச்சியாக புகைப்படங்களை பதிவிடுவதாக அண்மையில் விமர்சிக்கப்பட்டார். இந்த நிலையில் வாணி போஜன் நான் புடவையில் இருந்தாலும் கூட தனது புகைப்படங்கள் ஹாட் என கூறி சில தளங்களில் இருப்பதை பார்க்க முடிகிறது என்கிறார். நான் நல்லா போர்த்திக்கொண்டு இருக்கும் புகைப்படங்களை கூட இன்ஸ்டாகிராமின் தேவையில்லாத பக்கங்களில் பார்க்க முடிகிறது என்கிறார். அது எனக்கென்று மட்டுமல்ல . ஹாட் ஆக்ட்ரஸ் என கூறி எல்லா நடிகைகளின் படங்களையும்தான் பதிவிடுகிறார்கள். எனக்கு அதெல்லாம் கவலை கிடையாது , எப்படி இருந்தாலும் ஏதாவது சொல்லத்தானே போகிறார்கள் என மனம் திறந்திருக்கிறார் வாணி போஜன்.
முன்னதாக அவர் அளித்த பேட்டி ஒன்றில் “அந்தப் பேட்டியில், “ கவர்ச்சியாக நடிப்பதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் அதில் எல்லை மீறக்கூடாது. நான் சாதாரண புடவை கட்டினால் கூட கவர்ச்சி என்கிறார்கள். காலத்திற்கு ஏற்றபடி நமது சிந்தனை இருக்க வேண்டும்” என்று பேசியுள்ளார்.