வெற்றிமாறன் இயக்கி சூர்யா நடித்து வரும் வாடிவாசல் திரைப்படத்தின் கிராஃபிக்ஸ் வேலைகளை அவதார் படத்தில் பனிபுரிந்த தொழில் நுட்பக் கலைஞர்களுடன் சேர்ந்து இணைந்து முடிப்பதற்காக லண்டன் கிளம்பி சென்றுள்ளார் இயக்குநர் வெற்றிமாறன்.


விடுதலை படத்தைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் வாடிவாசல் படத்தின் வேலைகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.சி சு செல்லப்பாவின் வாடிவாசல் என்னும் நாவலை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தப் படம் ஜல்லிகட்டை கதைக்களமாக கொண்டது. எப்போதும் லைவாகவே காட்சிகளை சித்தரிக்க விரும்பும் வெற்றிமாறனுக்கு வாடிவாசல் படத்தில் ஒரு சிக்கல் இருந்து வந்தது. ஓரளவிற்கு மேல் ஜல்லிகட்டு தொடர்பான காட்சிகளை நேரடியாக எடுப்பது மிக ஆபத்தானது என்பதால் வாடிவாசல் திரைப்படத்தில் சிஜி பயன்படுத்தி மாடு பிடிக்கும் காட்சிகளை உருவாக்கலாம் என முடிவுசெய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தின் கிரஃபிக்ஸ் காட்சிகளின் வேலைகளை தொடங்குவதற்காக வெற்றிமாறன் லண்டன் சென்றுள்ளார். அவதார் படத்தின் சிஜி யில் வேலை செய்த தொழில் நுட்பக் கலைஞர்கள் வாடிவாசல் படத்தின்  பணிபுரிய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சூர்யா மற்றும் வெற்றிமாறனின் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது.


வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் மாதம் வெளியாகி ரசிகர்களின் இடையில் பெறும் வரவேற்பை பெற்றது.விஜய் சேதுபதி சூரி ஆகியவர்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.சூரி இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் குறித்தான எதிர்பார்ப்பு பலமடங்கு பெருகியுள்ளது.விடுதலைப் படம் தற்போது ஜீ ஃபைவில் காணக்கிடைக்கிறது.ஏற்கனவே பல படங்களை வரிசையில் வைத்திருக்கும் வெற்றிமாறன் அடுத்து யார் படத்தை இயக்கப் போகிறார் என அவரது ரசிகர்களால் எதிர்பார்க்கப் பட்டது.அது மட்டுமில்லாம மற்றொரு தரப்பு ரசிகர்கள் வடசென்னை படத்தின் இரண்டாம் பாகத்தினை எடுக்குமாறு இணையதளத்தில் ட்ரெண்ட் உருவாக்கி வந்தார்கள் . அதற்கு பதிலளிக்கும் வகையில் அடுத்ததாக வாடிவாசல் படவேலைகளை  தொடங்கப் போவதாக வெற்றிமாறன் தெரிவித்தார்.


வாடிவாசல் படத்திற்காக சூர்யா பிறந்த நாளன்று ஒரு சிறிய முன்னோட்டம் வெளியிடப் பட்டது.விரைவில் வாடிவசல் படம் குறித்தான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.வாடிவாசல் படத்திற்கு பின் வடசென்னை இரண்டாம் பாகத்தினை அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்


நடிகர் சூர்யா தற்போது  அடுத்தடுத்து நிறையப் படங்களில் நடித்து வருகிறார். சிவா இயக்கத்தில் உருவாகும் வரலாற்றுத் திரைப்படமான சூர்யாவின் கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு ஓட்டத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது வாடிவாசல் படம் குறித்தான இந்த தகவல் அவரது ரசிகர்களுக்கு டபுள் டமாகாவாக அமைந்துள்ளது.