உர்ஃபி ஜாவேது என்ற பெயரைக் கேட்டவுடனேயே இளவட்டங்கள் உஃப்.. என்று பெருமூச்சு விடும் அளவிற்கு ஹாட் கேர்ள் அவர்.

Continues below advertisement

தொலைக்காட்சி பிரபலமான உர்ஃபி ஜாவேத் 2016ல் படே பய்யா கி துல்ஹனியா என்ற தொடரில் அவ்னி பந்த் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததின் மூலம் ரசிகர்களைப் பெற்றார். அதன் பின்னர் சந்திரா நந்ஹினி, சாத் ஃபேரோ கி ஹீரா ஃபேரி, பெப்பன்னா, ஜிஜி மா, ஆயி மேரே ஹம்சஃபர் என பல தொடர்களில் நடித்து தனது ஃபேன்ஸ் கிளப்பை விஸ்தரித்து வைத்துள்ளார்.

பிக்பாஸில் கலந்து கொண்டார். அதன் மூலம் அவர் மீது இன்னும் இன்னும் அதிகமாக ஊடக வெளிச்சம் பாய்ந்தது.இந்நிலையில், அந்த வெளிச்சம் எல்லாம் பத்தாது என்பதுபோல் அவ்வப்போது தனது இன்ஸ்டா, சமூக வலைதள பகிர்வுகள் குறிப்பாக புகைப்படங்கள் மூலம் லைம் லைட்டுக்கு வருவார். ட்ரோல் ஆனாலும் பரவாயில்லை ஊடக வெளிச்சத்திற்கு வந்தால் போதும் என்று வரும் கேட்டகரி அவர். ராக்கி சாவந்த், பூனம் பாண்டே, ஸ்ரீரெட்டி வகையறாவில் வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம் இவரை.

Continues below advertisement

கடந்த மாதம் ஒரு நீல நிற உடையில் தோன்றி ரசிகர்களை சூடேற்றினார். சில நெட்டிசன்கள் ஃபோட்டோவை ரசித்துவிட்டு ஒழுக்கம் பற்றி பாடம் எடுத்துச் சென்றனர். அந்தப் படத்தால் அவர் ட்ரோல் செய்யப்பட்டார்.அது போன மாதம், இது இந்த மாதம் என்று வடிவேலு ஸ்டைலில் சற்றும் சளைக்காதவராக உர்ஃபி ஜாவேத் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். 

அந்தப் புகைப்படத்தில் பெய்ஜ் கலர் என இளசுகளால் ஸ்டைலிஸாக சொல்லிக் கொள்ளப்படும் காக்கி கலரில் இரு பேண்ட் அணிந்துள்ளார். உர்ஃபியின் மேலாடை தான் இப்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. வளவளப்பான சேட்டின் துணியால் ஆன அந்த டாப் கழுத்தில் சிறு முடிச்சுடன் கீழே ஏதோ திரைத் துணி போல் படர்ந்துள்ளது. இதுவும் கொஞ்சம் ஸீ த்ரூ உடை தான். ஆனால், உர்ஃபி ஜாவேத் இந்தப் புகைப்படத்தில் கிளாமரஸாக அழகாக இருக்கிறார் என்று பலரும் கருத்துகளைப் பதிவிட, ஒரு சில நெட்டிசன்களோ உனக்கு வெட்கமே இல்லையா என்று விளாசியுள்ளனர். ஆனால் அவருக்கு ஆதரவாகவும் பலர் பதிவிட்டு வருகின்றனர். ஆடை சுதந்திரத்தில் தலையிட என்ன உரிமை இருக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது குறித்து பதிவிட்டுள்ள சிலர், அவரது கிளாமரஸ் ஆடையுடனான ஃபோட்டோஷூட் எங்கோ ரிசார்ட்டில் நடைபெறவில்லை. மக்கள் நடமாடும் சாலையில் தான் நடந்துள்ளது.

அந்த வீடியோவில் உர்ஃபி ரொம்ப கான்ஃபிடன்ட்டா, ஸ்டைலாக போஸ் கொடுக்கிறார். அவரைக் கொஞ்ச நேரத்தில் அந்தப் பகுதியில் இருந்த எளிய மனிதர்கள் சூழ்ந்து கொள்ள அவர்களுடனும் உர்ஃபி போஸ் கொடுத்து ஃபோட்டோக்கள் எடுத்துக் கொள்கிறார். அந்தப் பெண்கள் உர்ஃபியுடன் மிக சகஜமாகப் பேசுகிறார்கள். அந்தப் பெண்கள் யாரும் உர்ஃபியின் ஆடையை ஆபாசமாக இருப்பதாக விமர்சிக்கவில்லை. அருவருப்பாகவும் பார்க்கவில்லை. ஆடையில் ஆபாசம் என்பதைவிட பார்வையில் ஆபாசம் என்பதை உணர்த்துவது போல் அந்தப் பெண்கள் நடந்து கொண்டு சென்றனர். இப்படி இருக்கையில் சோஷியல் மீடியாவில் மட்டும் சில பொங்குவது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளனர்