ஓடிடித் தளத்தில் வெளியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல் வாரத்திலேயே வெளியேற்றப்பட்ட நடிகை உர்ஃபி ஜாவேத். தான் அணியும் ஆடைகளால் அவ்வப்போது கவனம் ஈர்க்கும் இவர் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கிழிந்த மாதிரி மாடலைக் கொண்ட உடையை அணிந்து வந்திருந்தார். இவர் அணிந்து வந்த ஆடை சமூக வலைதளங்களில் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த விமர்சனங்களுக்கெல்லாம் தற்போது அவர் பதிலளித்துள்ளார்.  




இது குறித்து அவர் கூறும் போது, “ நான் இதை நினைச்சுல்லாம் கவலைப்பட்றது கிடையாது. அந்த முட்டாள் மக்கள் என்னை எப்போது தொந்தரவு செய்தது கிடையாது. நான் ஏன் இப்படி இருக்கன் எனக்குத் தெரியல.. ஆனா இது எனக்கு இடைஞ்சலா இருந்தது இல்ல.. ஆனா மீடியா என்னை அவமானப்படுத்திருக்கு.” என்றார்.. 





பிறரை போலவே ஆடையை அணிவது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, “ இது என்னை எந்த விதத்திலையும் பாதிக்காது..  எனக்கு நல்லாவே தெரியும் அது போல ஆடைகளை நான் அணியும்  போது ட்ரோல் செய்யப் படுவேன் அபப்டினு. இந்த ஆடையை பொருத்தவரை கெண்டல் ஜென்னரை பார்த்து நான் காப்பி அடித்ததாக சொல்றாங்க. இந்த ஆடையில அவர விட  நான்தான் ஹாட்டா இருக்கன்.. நான் அவர பாத்து காப்பி அடிக்கல.. அவர் அந்த ஆடையை போட்டுட்டு வந்த அடுத்த நாள் நான் அந்த ஆடையை போட்டுட்டு வந்தேன்..  ஒரு நாள் எப்படி அந்த ஆடையை தைக்க முடியும் சொல்லுங்க.. ” என்றார் 


மேலும் படிக்க: