தொலைக்காட்சி பிரபலமான உர்ஃபி ஜாவேத் 2016ல் படே பய்யா கி துல்ஹனியா என்ற தொடரில் அவ்னி பந்த் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததின் மூலம் ரசிகர்களைப் பெற்றார். அதன் பின்னர் சந்திரா நந்ஹினி, சாத் ஃபேரோ கி ஹீரா ஃபேரி, பெப்பன்னா, ஜிஜி மா, ஆயி மேரே ஹம்சஃபர் என பல தொடர்களில் நடித்து தனது ஃபேன்ஸ் கிளப்பை விஸ்தரித்து வைத்துள்ளார்.


பிக்பாஸில் கலந்து கொண்டார். அதன் மூலம் அவர் மீது இன்னும் இன்னும் அதிகமாக ஊடக வெளிச்சம் பாய்ந்தது. இந்நிலையில், அந்த வெளிச்சம் எல்லாம் பத்தாது என்பதுபோல் அவ்வப்போது தனது இன்ஸ்டா, சமூக வலைதள பகிர்வுகள் குறிப்பாக புகைப்படங்கள் மூலம் லைம் லைட்டுக்கு வருவார். ட்ரோல் ஆனாலும் பரவாயில்லை ஊடக வெளிச்சத்திற்கு வந்தால் போதும் என்று வரும் கேட்டகரி அவர். ராக்கி சாவந்த், பூனம் பாண்டே, ஸ்ரீரெட்டி வகையறாவில் வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம் இவரை. 


இந்தநிலையில், உர்ஃபி ஜாவேத் ஒரு வாடகை காரில் பயணித்து எங்கோ ஒரு ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அப்பொழுது  உர்ஃபி அணிதிருந்த உடை அனைவரையும் கவரும்படி மிகவும் கவர்ச்சியாக இருந்தது. அந்த உடையானது பழுப்பு நிற வண்ணத்தில் இடது தோளில் இருந்து வலது இடுப்பு வரை செல்லும் கட் செய்த  வடிவமைப்புடன் அணிந்திருந்தார். மேலும், உயரமான கோல்டன் பீப்-டோ ஹீல்ஸ் அணித்திருந்தார். 






உர்ஃபியின் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் இந்த உடையை கவனிக்க இது போதுமானதாக இருக்க, காரில் இருந்து இறங்கியதும், போட்டோகிராபர் அவரை சுற்றி வளைத்து புகைப்படம் எடுத்து கொண்டு இருந்தனர். கட்டிடத்தின் முன்பு உர்ஃபி நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்தபோது, அங்கிருந்த காவலாளி ஒருவர் புகைப்படம் எடுப்பதை தடுத்து இங்கு வர, போட்டோ எடுக்க அனுமதி இருக்கா என்று கேள்வி எழுப்பினார். 


அப்பொழுது,  உர்ஃபி தன் அமைதியை இழந்து, "எனக்குத் தெரியும், நான் திரும்பிச் செல்கிறேன்" என்று கூறினாள். பின்வரும் வீடியோவில், உர்ஃபி மிகவும் கோபமடைந்து, "இது என்ன, நான் ஏன் இங்கே வரவேண்டும். மீண்டும் இது நடந்தால் அவர் உடனடியாக வெளியேறுவார் என்று கூறியுள்ளார். தொடர்ந்து, ஆபாச வார்த்தையை காவலாளியை நோக்கி இரண்டு முறைக்கு மேல் பயன்படுத்தி திட்டினார். தற்போது, இந்த வீடியோ இணையத்தில் பரவி கண்டனம் எழுந்து வருகிறது. 






தொடர்ந்து உர்ஃபி ஜாவேத் “இது என்ன முட்டாள்தனம்?! யாரும் என்னிடம் வந்து இப்படிப் பேச முடியாது, குறிப்பாக நீங்கள் என்னை இங்கே அழைத்தால். சஞ்சித்திடம் (அவரது மேலாளரிடம்) இதை இப்போதே சொல்லுங்கள். நான் இப்போதே திரும்பிப் போகிறேன் என்று கத்திய வீடியோவையும் காணலாம். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண