பாலிவுட் திரையுலகில் கவர்ச்சியாலும், தன் வெளிப்படையான மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துக்களாலும் கவனமீர்த்து சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் ராக்கி சாவந்த்.


முன்னதாக ராக்கி சாவந்த், அதீத கவர்ச்சி மற்றும் தன் வித்தியாசமான உடைகளால் சமீபகாலமாக சமூக வலைதள சென்சேஷனாக விளங்கும் பிக்பாஸ் புகழ் நடிகை உர்ஃபி ஜாவேத்தை பாராட்டித் தள்ளியுள்ளார்.


 






என்னைப் பின்பற்றுகிறார்...


"உர்ஃபி என் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறார், அவரது வாழ்க்கையில் சிறப்பாக செயல்படுகிறார். அவர் தான் தற்போதைய பேஷன் ஐகான், ரன்வீர் சிங் கூட உர்ஃபியை பாராட்டியுள்ளார்” என ராக்கி சாவந்த் உர்ஃபியை புகழ்ந்துள்ளார். 


முன்னதாக காஃபி வித் கரண் நிகழ்ச்சியின் தற்போதைய சீசனில் கலந்துகொண்ட நடிகர் ரன்வீர் சிங் உர்ஃபி ஜாவேத்தை ’ஃபேஷன் ஐகான்’ என அழைத்தது சமூக வலைதளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டது.


பாலிவுட்டில் வித்தியாசமான பலரும் அணியத் தயங்கும் ஆடைகளை அணிந்து கலக்குவதில் நடிகர் ரன்வீர் சிங் ஏற்கெனவே பிரபலமானவர். உர்ஃபிக்கும் முன்னோடி.


 






இந்நிலையில் உர்ஃபியை ரன்வீர் சிங்கும் ராக்கி சாவந்தும் இவ்வாறு புகழ்ந்துள்ளது நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.