உர்ஃபி ஜாவெத்


பிரபல இந்தி தொலைக்காட்சிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை உர்ஃபி ஜாவெத். அசாதாரணமான பேஷன் சென்ஸ் மற்றும் துணிச்சலான உடை தேர்வுகளுக்கு பிரபலமான உர்ஃபி ஜாவேத் இணையத்தில் எப்போதும்   ட்ரெண்டிங்கில் இருந்து வந்தாலும் மறுபுறம் அவரை படு பங்கமாக  இணையவாசிகள் ட்ரோல் செய்தும் வருகிறார்கள். என்ன தான் ட்ரோல் செய்தாலும் படும் பங்கமாக கலாய்த்தாலும் கொஞ்சமும் அசராமல் கடமையின் மேல் கண்ணும் கருத்துமாக இருப்பவர் உர்ஃபி ஜாவேத்.  பாட்டில் மூடிகளால் செய்யப்பட்ட  ஆடை அணிவது, ப்ளேடால் செய்யப்பட்ட ஆடைகள், கயிறு, பூக்கள் , ரோஜா இதழ்கள் என வித்தியாசமான ஆடைகளை அணிந்து இணையதளத்தில் அடிக்கடி வைரலாகி வருகிறார். 


எதிர்கொண்ட சவால்கள்


தன்னுடைய ஆடைத் தேர்வுகளுக்காக விமர்சனங்களைத் தவிர்த்து எதார்த்தத்தில் பல்வேறு சிக்கல்களையும் சந்தித்து வருகிறார் உர்ஃபி. முன்னதாக மும்பையில் தனக்கு வீடு வாடகைக்கு கிடைப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்து உர்ஃபி வேதனையாகப் பதிவிட்டது இணையத்தில் பேசுபொருளானது. “நான் உடுத்தும் உடையால் முஸ்லிம்கள் எனக்கு வீடு வாடகைக்கு தர விரும்பவில்லை. இன்னொருபுறம் நான் முஸ்லிம் என்பதால் இந்துக்கள் எனக்கு வீடு வாடகைக்கு விடுவதில்லை. மேலும் சில உரிமையாளர்களுக்கு எனக்கு வரும் அச்சுறுத்தல்கள் சிக்கல்களாக உள்ளன. மும்பையில் வாடகைக்கு ஒரு வீட்டைத் தேடி கண்டுபிடிப்பது மிகக் கடினமானது” எனப் பதிவிட்டிருந்தார்.  அதேபோல் தன் உடை பற்றி விமர்சித்த பிரபல எழுத்தாளர் சேத்தன் பகத்துக்கு பதிலடி கொடுத்து உர்ஃபி இணையத்தில் முன்னதாக பேசுபொருளானார்.


ஒழுங்கற்ற ஆடைகள் அணிந்ததால் கைது






தற்போது இணையதளத்தில் உர்ஃபி ஜாவெத் மும்பை காவல் துறையினரால் கைது செய்யப்படும் வீடியோ இணையதளத்தில் வைராகி வருகிறது. பிரபல புகைப்பட கலைஞரான விரால் பயானி பகிர்ந்துள்ள வீடியோ ஒன்றில் மும்பையில் இருக்கும் கஃபே ஒன்றில் காஃபி குடித்துக் கொண்டிருந்த உர்ஃபியை இரண்டு பெண் போலீஸ் கைது செய்தனர். ஒழுங்கற்ற ஆடைகளை அணிந்திருந்ததால் அவரை கைது செய்வதாக காவல் துறை சார்பின் விளக்கம் அளிக்கப் பட்டது. இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது


உண்மையா பொய்யா


உர்ஃபி கைது செய்யப் பட்டதாக ஒரு பக்கம் தகவல் பரவி  வரும் நிலையில் மறுபக்கம் இந்த தகவல் பொய்யென்றும் ஒரு சிலர் கூறி வருகிறார்கள். மும்பை போலீஸ் உர்ஃபியை கைது செய்யவில்லை என்றும் இந்த வீடியோ பப்ளிசிட்டிக்காக உருவாக்கப்  பட்டதாக இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.