OTT Release: ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகும் அடுத்த சீரிஸ்.. “உப்பு புளி காரம்” ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Uppu Puli Kaaram: டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான 'உப்பு புளி காரம்'  விரைவில் ஸ்ட்ரீமாக உள்ளது.

Continues below advertisement

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான 'உப்பு புளி காரம்' (Uppu Puli Kaaram) சீரிஸை ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.

Continues below advertisement

தீம் பாடல் வெளியீடு

மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் கொண்டாடும் கலகலப்பான மற்றும் துடிப்பான 'குடும்பப் பாட்டு' எனும் தீம் பாடலுடன் இந்த சீரிஸ் வெளியாகும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. வண்ணமயமான காட்சிகள் மற்றும் நட்சத்திர நடிகர்களின் பங்களிப்பில், ஒரு மகிழ்ச்சியான மற்றும் இளமை நிறைந்த குடும்ப பொழுதுபோக்கை இந்த சீரிஸ் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘கனா காணும் காலங்கள்’ மற்றும் ‘ஹார்ட் பீட்’ சீரிஸ்கள் பார்வையாளர்களின் இதயங்களை வென்றது போல, இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸான 'உப்பு புளி காரம்' சீரிஸானது, காதல், காமெடி, ஃபேமிலி செண்டிமெண்ட் மற்றும் பல அதிரடி திருப்பங்களுடன் அட்டகாசமான பொழுதுபோக்கை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கதை, நடிகர்கள்

'உப்பு புளி காரம்' ஒரு வயதான அழகான தம்பதி மற்றும் அவர்களின் நான்கு குழந்தைகள் என அவர்களின் குடும்பத்தில் நிகழும் சம்பவங்களை சுற்றி பின்னப்பட்ட கதையாகும். இந்த சீரிஸில் நடிகர்கள் பொன்வண்ணன், வனிதா, ஆயிஷா, நவீன், அஷ்வினி, தீபிகா, கிருஷ்ணா, ஃபரினா, தீபக் பரமேஷ் மற்றும் ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே இடம்பெற்றுள்ளது.

விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரித்துள்ள ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸை, M ரமேஷ் பாரதி இயக்கியுள்ளார். ஷேக் இசையமைக்க, பார்த்திபன் மற்றும் சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்கள். முன்னதாக வெளியான ஹார்ட் பீட் தொடர் மருத்துவமனை, மருத்துவர்களின் வாழ்க்கை ஆகியவற்றை சுற்றி அமைந்து 40 எபிசோடுகளைக் கடந்து வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், அதே போல் இந்த சீரிஸூம் ஓடிடி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி: டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முந்தைய ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்கள் தங்கள் பொழுதுபோக்கைப் பார்க்கும் முறையை மாற்றியமைத்துள்ளது. அவர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்ச்சிகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது.  மேலும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது.

மேலும் படிக்க: Election Movie Review: தேர்தல் களத்தில் வென்றாரா விஜயகுமார்? - எலக்சன் படத்தின் விமர்சனம் இதோ!

Inga Naan Thaan Kingu Review: காமெடி ஜொலிக்கிறதா? சோதிக்கிறதா? - சந்தானத்தின் “இங்க நான் தான் கிங்கு” விமர்சனம் இதோ!

Continues below advertisement
Sponsored Links by Taboola