OTT Release Movies: த்ரிஷா முதல் அபிஷேக் பச்சன் வரை... இந்த வாரம் ஓடிடியில் ரிலீசாகும் நடிகர்களின் படங்கள்..
OTT Release Movies: இந்த வாரம் ஓடிடி தளத்தில் ரிலீசாகும் படங்கள் மற்றும் வெப் தொடர்களின் லிஸ்ட் இதோ..
Continues below advertisement

ஓடிடி ரிலீஸ் படங்கள்
OTT Release Movies: இந்த வாரம் ஓடிடி தளத்தில் திரிஷா நடித்த தி ரோட், லேபிள், கூமர், பிப்பா உள்ளிட்ட படங்கள் வெளிவர உள்ளன.
திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு போட்டியாக ஓடிடி தளங்கள் புதிய திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் ரிலீசாகி வருகின்றன. இதில் அமேசான் பிரைம், நெட்ளிக்ஸ், ஹாட்ஸ்டார், ஆஹா, ஜீ5, ஜியோ உள்ளிட்ட ஓடிடி தளங்கள் போட்டிப்போட்டு கொண்டு புதிய படங்களை ரிலீஸ் செய்கின்றன. அந்த வகையில் கடந்த வாரம் ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில், அட்லீ இயக்கத்தில் வெளிவந்த ஜவான், விஜய் நாண்டனி நடிப்பில் வெளிவந்த ரத்தம், விக்ரம் பிரபு நடித்த இறுகப்பற்று உள்ளிட்ட படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளன. இதில் ஜவான் மற்றும் இறுகப்பற்று நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான.
இந்த நிலையில் இந்த வாரம் சில படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த பெரிதாக ஹிட் அடித்த தமிழ் படங்கள் இல்லை என்றாலும், நல்ல வரவேற்பை பெற்ற சில படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளது.
தி ரோட்: த்ரிஷா நடிப்பில் வெளிவந்த தி ரோட் படம் ஆஹா ஓடிடி தளத்தில் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. அருன் வசீகரன் இயக்கிய இந்த படத்தில் சந்தோஷ் பிரதாப், டான்ஸிங் ரோஸாக கலக்கிய ஷபீர், மியா ஜார்ஜ், வேல ராமமூர்த்தி, விவேக் பிரசன்னா, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். மதுரையை மையாக கொண்டு 2000ம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தி ரோட் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் கடந்த அக்டோபர் 7ம் தேதி திரைக்கு வந்தது.
லேபிள்: தமிழில் கனா, நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட பங்களை இயக்கிய அருண் ராஜா காமராஜ் இயக்கி இருக்கும் வெப் சீரிஸ் தான் லேபிள். இதில் ஜெய் ஹீரோவாக நடித்துள்ளார். அவரை தவிர தன்யா ஹோப், மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துளனர். சாம்.சி.எஸ். இசை அமைத்துள்ள இந்த வெப் தொடர் வரும் 10ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
கூமர்: ஒரு கை இல்லாத கிரிக்கெட் வீராங்கனையின் கதையை கூறும் விதமாக எடுக்கப்பட்ட படம் கூமர். ஆர்.பால்கி இயக்கி உள்ள இந்த படத்தில் அபிஷேக் பச்சன் மற்றும் சயாமி கெர் நடித்துள்ள கூமர் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் வரும் 10ம் தேதி ZEE5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
ரெயின்போ ரிஷ்டா வெப் தொடர் அமேசான் பிரைமில் இன்று வெளியாகியுள்ளது. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற போரின் போது துணிச்சலான கேப்டனாக இருந்த மேத்தாவின் கதையை தழுவி எடுக்கப்பட்ட பிப்பா படம் வரும் 10ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது.
Continues below advertisement
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.