தமிழ் சினிமாவில் ஸ்டார் அந்தஸ்து பெற்ற நடிகர்களுள் நடிகர் விஜயும் ஒருவர். ரசிகர்களால் தளபதி என்று அழைக்கப்படும் விஜய் பல ஹிட் படங்களை கொடுத்து அசத்தியுள்ளார். விஜய் நடிப்பு மட்டுமல்லாமல் தன்னுடைய அழகிய நடனத்துக்கும் பெயர் போனவர். இவருடைய நடனத்தை பார்க்கவே ஒரு தனி கூட்டம் படங்களுக்கு செல்லும். அந்தவகையில் அவரின் 47ஆவது பிறந்தநாளில் அவர் நடனத்தில் அமைந்த சிறப்பான பாடல்கள் என்னென்ன?
1. தாம் தக்க தீம் தக்க:
திருமலை திரைபடத்தில் அமைந்த இந்தப் பாடலுக்கு நடிகர் விஜய் மற்றும் நடன இயக்குநர் ராகவேந்திரா லாரன்ஸ் ஆடியிருப்பார்கள். இதில் விஜயின் நடனம் அனைவரையும் வெகுவாக கவர்ந்து இருக்கும். வித்யாசாகர் இசையில் இந்தப் பாடல் சிறப்பாக அமைந்திருக்கும்.
2. ஆள் தொட்ட பூபதி:
மணி சர்மா இசையில் யூத் திரைப்படத்தில் இந்தப் பாடல் அமைந்திருக்கும். இதில் நடிகர் விஜய் மற்றும் நடிகை சிம்ரன் சிறப்பாக நடனம் ஆடியிருப்பார்கள். சங்கர் மகாதேவனின் குரலும் சிறப்பாக இருக்கும்.
3. அப்படி போடு:
கில்லி திரைப்படத்தில் விஜய் த்ரிஷா நடிப்பில் வெளியான சிறப்பான பாடல் இது. இந்தப் பாடலில் விஜய்மற்றும் த்ரிஷாவின் நடனம் சிறப்பாக அமைந்திருக்கும். இந்தப் பாடலுக்கும் வித்யாசாகர் இசையமைத்திருப்பார்.
4. நீ எந்த ஊரு:
திருப்பாச்சி திரைப்படத்தில் அமைந்திருக்கும் இந்தப் பாடலில் விஜயின் நடனம் வெகுவாக பலரை கவர்ந்தது. திப்புவின் குரலில் தினாவின் இசை இப்பாடலுக்கு மேல் வலு சேர்க்கும் வகையில் அமைந்திருக்கும்.
5. மின்னலை பிடித்து:
ஷாஜகான் திரைப்படத்தில் மணிசர்மாவின் இசையில் உன்னி மேனன் குரலில் அமைந்தப் பாடல் இது. குத்து பாடல்களுக்கு மட்டுமல்லாது மெலடி பாடல்களில் கூட விஜயின் நடன அசைவுகள் சிறப்பாக. அந்தவகையில் அமைந்தது தான் இந்தப் பாடல்.
6. கோடம்பாக்கம் ஏரியா:
சிவகாசி திரைப்படத்தில் இந்தப் பாடல் அமைந்திருக்கும். இப்பாடலுக்கு விஜய் மற்றும் நயன்தாரா சிறப்பாக ஆடியிருப்பார்கள். திப்பு மற்றும் விஜயின் அம்மா சோபா சந்திரசேகர் இந்தப் பாடலை பாடியிருப்பார்கள். ஶ்ரீகாந்த் தேவா இப்பாடலுக்கு இசையமைத்திருப்பார்.
7. வாடி வாடி :
சச்சின் திரைப்படத்தில் அமைந்த சிறப்பான நடன பாடல் இது. விஜய் குரலில் அமைந்திருக்கும் பாடலுக்கு தேவி ஶ்ரீபிரசாத் இசையமைத்திருப்பார். இதில் விஜய் குரலுடன் அவருடைய நடனமும் பெரிய ஹிட் அடித்தது.
8. எல்லா புகழும் ஒருவன்:
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அழகிய தமிழ்மகன் திரைப்பட்டத்தில் அமைந்த பாடல் இது. இந்தப் பாடலின் வரிகள் மற்றும் விஜயின் நடனம் நமக்கு நல்ல நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கும்.
9. வெறிதனம்:
பிகில் திரைப்படத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் அமைந்த மற்றொரு பாடல் இது. இந்தப் பாடலையும் விஜய் பாடியிருப்பார். இப்பாடலுக்கு அவருடைய குரல் மற்றும் நடனம் சிறப்பாக அமைந்திருக்கும்.
10. வாத்தி கம்மிங்:
மாஸ்டர் திரைப்படத்தில் அமைந்திருக்கும் இந்தப் பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. குறிப்பாக ஒரு நடன அசைவு இந்திய கிரிக்கெட் அணி உள்பட பல இடங்கள் வரை பிரபலம் அடைந்தது. இந்தப் பாடலுக்கு அனிருத் இசையமைத்திருப்பார்.
இவ்வாறு விஜய் நடன பாடல்களை பட்டியலிட்டு கொண்டு போனால் அதை முழுவதும் நம்மால் முடிக்க முடியாது. ஏனென்றால் விஜயின் நடனம் அவ்வளவு சிறப்பாக அமைந்திருக்கும்.
மேலும் படிக்க: விஜய் வைத்திருக்கும் துப்பாக்கி என்ன தெரியுமா? போஸ்டர் பிழையை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!