Just In





Actor Vijay Birthday | தளபதி விஜய் பிறந்தநாள்: ட்விட்டரில் குவியும் பிரபலங்களின் வாழ்த்துகள் !
நடிகர் விஜயின் பிறந்தநாளுக்கு சக நடிகர்கள் இயக்குநர்கள் என பலரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் ஸ்டார் நடிகர்களுள் ஒருவரான தளபதி விஜய் இன்று தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று அவருடைய அடுத்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இது ட்விட்டரில் மிகவும் வைரலானது. அந்த வகையில் இன்று விஜயின் பிறந்தநாள் காரணமாக ட்விட்டரில் "#HBDThalapathyVijay" என்ற ஹேஷ்டேக் தற்போது ட்ரெண்டாக தொடங்கியுள்ளது.
இந்த ஹேஷ்டேக் பயன்படுத்தி ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல திரைப் பிரபலங்களும் தளபதி விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இசையமைப்பாளர் அனிருத், நடிகர் சதீஷ் உள்ளிட்ட பலரும் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இவ்வாறு பலரும் நடிகர் விஜய் பிறந்தநாளுக்கு ட்விட்டரில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: ‛பங்கம் பங்கம் பதிலடி... அண்ணா பண்ணும் அதிரடி... வாத்தி யாரு தளபதி!