உர்ஃபி ஜாவேத்
இந்தி தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை உர்ஃபி ஜாவேத் (Urfi Javed). அசாதாரணமான பேஷன் சென்ஸ் மற்றும் துணிச்சலான உடை தேர்வுகளுக்கு பிரபலமான உர்ஃபி ஜாவேத் இணையத்தில் எப்போதும் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார். பாட்டில் மூடிகளால் செய்யப்பட்ட ஆடை அணிவது, பிளாஸ்டிக் பைகளை உடலில் சுற்றிக் கொள்வது, ப்ளேட்டால் செய்யப்பட்ட ஆடைகள், சின்னக் குழந்தைகளின் விளையாட்டு பொம்மைகளை ஆடை செய்வது, கயிறு, பூக்கள், ரோஜா இதழ்கள் என கையில் கிடைக்கும் எல்லாவற்றையும் வைத்து வித்தியாசமான ஆடைகளை அணிந்து இணையதளத்தில் அடிக்கடி வைரலாகி வருபவர்.
பொது இடத்தில் குட்டியான ஆடை அணிந்ததற்காக உர்ஃபியை மும்பை போலீஸ் கைது செய்யும் வீடியோ ஒன்று கடந்த ஆண்டு வைரலானது. இதனைத் தொடர்ந்து இந்த வீடியோ ஒரு ஃபேஷன் பிராண்டுக்கான ப்ரோமோஷனுக்காக உருவாக்கப்பட்டதாக தெரியவந்தது.
இடுப்பிற்கு கீழ் சுற்றும் சூரிய குடும்பம்
மறுபுறம் அவரை படுபங்கமாக இணையவாசிகள் ட்ரோல் செய்தும் வருகிறார்கள். என்ன தான் ட்ரோல் செய்தாலும், எப்படி கலாய்த்தாலும் கொஞ்சமும் அசராமல் கடமையின் மேல் கண்ணும் கருத்துமாக இருப்பவர் உர்ஃபி ஜாவேத். தனது ஒவ்வொரு ஆடையிலும் ஏதாவது ஒரு வித்தியாசமான கண்டுபிடிப்பை செய்து ரசிகர்களை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி வருகிறார் உர்ஃபி ஜாவேத் . சமீப காலங்களில் குழந்தைகள் சைன்ஸ் ப்ராஜக்ட் செய்வது போல் தனது ஆடைகளில் அறிவியலையும் சேர்த்துள்ளார். இடுப்பிற்கு கீழ் சூரியக் குடும்பம் சுழலும் வகையில் கவுன் ஒன்றை அணிந்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் உர்ஃபி ஜாவேத்.
மேலும் கருப்பு நிற கவுன் ஒன்றில் இருந்து பட்டாம்பூச்சிகள் பறப்பது மாதிரியான ஆடை ஒன்றை அணிந்திருந்தார் உர்ஃபி. இந்த ஆடையை நடிகை சமந்தா மற்றும் ஹன்சிகா உள்ளிட்டவர்கள் புகழ்ந்து பேசியிருந்தார்கள்.
நெஞ்சில் சுற்றும் காற்றாடி
இதனைத் தொடர்ந்து தற்போது கோடை வெயிலை எதிர்கொள்ளும் வகையில் மற்றொரு கண்டுபிடிப்புடன் வந்திருக்கிறார் உர்ஃபி ஜாவேத். நெஞ்சில் இரண்டு குட்டிக் காற்றாடிகள் பொருத்தப்பட்ட ஆடையை அணிந்து வைரலாகி வருகிறார் உர்ஃபி. இந்த இரண்டு காற்றாடிகளும் மோட்டார்களுடன் இணைக்கப்படும் வகையில் இந்த ஆடை வடிவமைக்கப்பட்டுள்ளது.