2024ஆம் ஆண்டுக்கான தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை வெளியாகி உள்ளது.


தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள், கலை ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பணியிட மாறுதல் கலந்தாய்வுகள் மே மாதம் 24ஆம் தேதி தொடங்க உள்ளன. இந்தக் கலந்தாய்வு ஜூன் மாதம் 15-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் ஆசிரியர்கள் மாறுதலுக்கான விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்வதில் இருந்து, இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு வரை தேதிவாரியான அட்டவணை வெளியாகி உள்ளது.



  1. பொது மாறுதலுக்கான விண்ணப்பங்களைத் தலைமைஆசிரியர்கள் ஆசிரியர்கள் கல்வி மேலாண்மை தகவல் முகமை (EMIS) வாயிலாகப்ப திவேற்றம் செய்தல் - 13.05.2024 06.00AM முதல் 17.05.2024 06.00PM வரை.


 



  1. பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து வகை ஆசிரியர்களின் மாறுதல் கோரும் விண்ணப்பங்களின் முன்னுரிமப் பட்டியல் (Seniority List) மற்றும் காலிப்பணியிட விவரங்கள் (Vacancy List) வெளியிடுதல் - 20.05.2024 10.00 AM திங்கள்


 



  1. முன்னுரிமைப் பட்டியலில் திருத்தம் மற்றும் முறையீடுகள் ஏதும் இருப்பின் (Claims and objections)‌- 21.05.2024 05.00 PM செவ்வாய்


 



  1. மாறுதல் விண்ணப்பங்களின் இறுதி முன்னுரிமைப் பட்டியல் (Release off seniority list) Release of Vacancy List Final) - 23.05.2024 (வியாழன்)


 



  1. மலைச்சுழற்சி மாறுதல் கலந்தாய்வு- 24.05.2024 (வெள்ளி)



  1. இடைநிலை ஆசிரியர்கள் பணி நிரவல் கலந்தாய்வு - 28.05.2024 (செவ்வாய்)


 



  1. நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்) - 31.05.2024 (வெள்ளி)


 



  1. நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (கல்வி மாவட்டத்திற்குள்)-01.06.2024 (சனி) (முற்பகல்)


 



  1. நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்) - 01.06.2024 (சனி) (பிற்பகல்)


 



  1. நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) - 03.06.2024 (திங்கள்)


 



  1. பட்டதாரிஆசிரியர்கள்மாறுதல்கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்)- 06.06.2024 (வியாழன்)


 



  1. பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (கல்வி மாவட்டத்திற்குள்)- 07.06.2024 வெள்ளி (முற்பகல்)


 



  1. பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்)- 07.06.2024 வெள்ளி (பிற்பகல்)


 



  1. பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்)- 08.06.2024 (சனி)


 



  1. தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்)- 10.06.2024 (திங்கள்)


 



  1. தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (கல்வி மாவட்டத்திற்குள்)- 11.06.2024 (செவ்வாய்) (முற்பகல்)


 



  1. தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்) - 11.06.2024 செவ்வாய் (பிற்பகல்)


 



  1. தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்)-12.06.2024


 



  1. இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்கு - 13.06.2024 (வியாழன்)


 



  1. இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (கல்வி மாவட்டத்திற்குள்)- 14.06.2024 (வெள்ளி) (முற்பகல்)

  2. இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்). - 15.06.2024