Mamannan: மாமன்னன் வெற்றி.. இளம் அதிவீரனுக்கு லேப்டாப் வழங்கிய உதயநிதி..!
மாமன்னன் திரைப்படத்தில் இளம் அதிவீரனாக நடித்த மாணவர் சூர்யாவுக்கு உதயநிதி ஸ்டாலின் லேப்டாப் பரிசாக வழங்கினார்.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு உள்ளிட்டோரின் நடிப்பில் உருவான மாமன்னன் படத்தில் இளம் அதிவீரனாக நடித்த நடிகர் சூர்யாவுக்கு உதயநிதி ஸ்டாலின் லேப்டாப் ஒன்றை பரிசாக வழங்கி உள்ளார்.
மாமன்னன் வெற்றி:
Just In




மாமன்னன் திரைப்படம் இதுவரை 45 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், படத்தில் பணியாற்றிய கலைஞர்களை அங்கீகரித்து உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு உண்டான மரியாதையை செலுத்தி வருகிறார். உதயநிதி ஸ்டாலின் நடித்த படங்களிலேயே பெரிய ஓப்பனிங் மாமன்னன் படத்திற்கு தான் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாமன்னன் திரைப்படம் வென்ற நிலையில் தனக்கு அப்படியொரு படத்தை கடைசி படமாக கொடுத்த இயக்குநர் மாரி செல்வராஜை பாராட்டி மினி கூப்பர் காரை பரிசாக அளித்தார் உதயநிதி.
இதனையடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் வடிவேலுவின் வீட்டுக்கே சென்று அவருக்கு சால்வை மற்றும் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய வீடியோ நேற்று வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
லேப்டாப் பரிசு:
இந்நிலையில் மாமன்னன் படத்தில் வடிவேலுவுக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் என்ன பிரச்சனை ஏன் 15 ஆண்டுகள் பேசிக் கொள்ளாமல் இருக்கின்றனர் என்பதற்காக வரும் பிளாஷ்பேக் சீனில் குளத்தில் குளிக்கும் காட்சியில் இளம் அதிவீரனாக நடித்த, நடிகர் சூர்யாவின் நடிப்பு அனைவராலும் கவனிக்கப்பட்டது. இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் மாரி செல்வராஜிடன் இணைந்து, தற்போது கல்லூரி படித்து வரும் அந்த இளம் நடிகர் சூர்யாவை பாராட்டி அவருக்கு லேப்டாப் ஒன்றை பரிசாக வழங்கினார். தற்போது இணையத்தில் அதன் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த திரைப்படம் வெளியானது முதல் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் இந்த படத்தை பார்த்து விட்டு இயக்குனர் மாரி செல்வராஜை வீட்டிற்கு அழைத்து பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
Director Perarasu: “சினிமாவில் சாதி இல்லை; இளையராஜா காலில் வேறு சமூகத்தினர் விழவில்லையா?” - பேரரசு