டிக் டாக் மூலமாகவும், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலமாகவும் பிரபலமடைந்தவர்கள் ஏராளம்; அந்த வரிசையில் பிரபலமடைந்த தம்பதி தான் உதயா-சுமதி. சில மாதங்களுக்கு முன்பு உதயாவுக்கு விபத்து ஏற்பட்டு உயிரிழந்தார். அதன் பிறகும் அவரது மனைவி சுமதி இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் தொடர்ந்து வீடியோக்களை பதிவிட்டு வந்தார்; இந்த நிலையில், கணவர் இறந்த பிறகும் கூட இதுபோன்ற வீடியோகளை பதிவிடுகிறார், பூ வைக்கிறார் என சுமதி மீது எக்கச்சக்க விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த விமர்சனங்களுக்கு சுமதி தற்போது விளக்கமளித்துள்ளார்.



                                         


இது தொடர்பாக ஒரு தனியார் ஊடகத்தில் பேசிய அவர், "இப்போது உதயா இல்லாதது கவலையாக இருக்கிறது. எல்லோரும் உதயா இறந்த பிறகும் நான் சந்தோஷமாக வீடியோக்களை பதிவிடுவதாக நினைப்பார்கள்; உதயா இல்லாதது நிச்சயமாக கவலையாகத்தான் இருக்கிறது. 


என்னைவிட அதிகமாக கவலைப்படுபவர்களை நான் இப்போது வரை பார்த்துக் கொண்டிருகிறேன்.பல நேரங்களில் பல துன்பங்கள் வந்துகொண்டு தான் இருக்கிறது. அதையெல்லாம் தாண்டி தான் நான் இந்த இடத்தில் நிற்கிறேன்.நீங்கள் யாரும் கோழையாக இருந்துவிடாதீர்கள் தைரியமாக இருங்கள்". என்றார். 


 



                                             


 


உதயாவின் நினைவு வந்தால் 'ஏன் என்னை விட்டு போன' என்று தான் கேட்பேன். நான் ஒரு குழந்தையோடு இங்கு நின்று கொண்டிருக்கிறேன். ஆனால் அவன் என்னை விட்டு சென்றுவிட்டான். இப்போது வரைக்கும் உதயா வீட்டிலிருந்தும் என் வீட்டிலிருந்து எனக்கு பிரச்சினைகள் தொடர்ந்து வருகிறது. நான் மற்றவர்களின் பேச்சை பின்தொடர்ந்து வந்தேன். இப்போது தான் தெரிகிறது யாரும் நல்லவர்கள் கிடையாது ,அனைவரும் ஒரு சுயநலத்துடன் தான் இருக்கிறார்கள்.


அதை நான் இப்போது புரிந்து கொண்டேன். நான் என் குழந்தைக்காக ஓடிக் கொண்டே இருப்பேன்.பொருளாதார ரீதியாக யூடியூப் மூலம் மக்கள் ஆதரவினால் ஓடிக்கொண்டிருக்கிறேன். என் குழந்தை பள்ளி கட்டணத்திற்கும் உதவியாக அது இருக்கிறது. 


யூடியூப் மூலம் கிடைக்கும் பணம் ஒவ்வொரு மாதமும் மாறுபடும்; மக்களின் ஆதரவினால் இப்போது வரை ஓடிக் கொண்டிருக்கிறேன்.உதயா என்னுடன் இருக்கும் வரை ,' என்னோடு இருந்துவிடு, என்னை விட்டு போகாதே' என்று தான் கூறுவேன். என் குழந்தைக்கு உதயா இல்லாதது புரிய வருகிறது. அவனிடம் எதைக் கூறி சமாளிப்பதென்று இப்போது வரை எனக்கு தெரியவில்லை. எனது வீடியோவில் கமெண்டுகளில் உதயா இறந்துவிட்டார்,ஏன் பூ,பொட்டு வைக்கிறீர்கள் என கேட்பார்கள். பூ என்பது ஒருவனுக்காக நாம் வைப்பது அல்ல. சிறுவயதிலிருந்தே பூ வைத்து வருகிறோம். உதயா இருக்கும் போதும் விடியோவிற்காக பூ வைத்து விட்டு கிழே போட்டு விடுவேன். அது தொடர்பாக மட்டும் யாரும் தவறாக பேச வேண்டாம்." என கண்கலங்க பேசினார், சுமதி.