உலக பொருளாதார மந்த நிலை அச்சத்தையொட்டி, இந்திய பங்குச் சந்தை சரிவுடன் முடிவடந்தது. இன்றைய பங்குச் சந்தையில், மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ்,103.90 புள்ளிகள் குறைந்து 61,702.29 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 35.15 புள்ளிகள் குறைந்து 18,385.30 புள்ளிகளில் வர்த்தகமானது.
லாபம்- நஷ்டம்:
சென்செக்ஸ் 30 நிறுவனங்களில் 9 நிறுவனங்கள் மட்டுமே காணப்பட்டன. 21 நிறுவனங்கள் சரிவுடனும் காணப்பட்டடன. குறிப்பாக, ஐடி நிறுவனங்கள் சரிவுடன் காணப்பட்டன.
அதானி போர்ட்ஸ், அப்போலோ மருத்துவமனை, பஜாஜ் ஆட்டோ, பாரதி ஏர்டெல், சிப்லா, கோல் இந்தியா, இன்ஃபோசிஸ், டெக் மகேந்திரா, டைட்டான் நிறுவனம், டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவுடன் காணப்பட்டன.
ஆசியன் பெயிண்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, நெஸ்ட்லே, ரிலையன்ஸ், சன் பார்மா, டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் காணப்படுகின்றன.
தாக்கம்:
சீனாவில் கொரோனா தொற்றுக்கான தாக்கம் சற்று குறைந்து வருகிறது. இந்நிலையில் கச்சா எண்ணெய்க்கான தேவை சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் உயரும் சூழல் நிலவுகிறது.
இந்நிலையில் டாலருக்கு எதிரான இதர நாணயங்களின் மதிப்பு உயரும் தன்மை காணப்படுகிறது. டாலர் ரூபாய் மதிப்பானது இந்திய பங்கு சந்தையை கனிசமாக பாதித்தாலும்
ரூபாயின் மதிப்பு:
அமெரிக்க டாலருக்கு நிகரான, இந்திய ரூபாய் மதிப்பானது 13 காசுகள் குறைந்து 82.75 ரூபாயாக ஆக உள்ளது என பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.