மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் இணைந்துள்ள திரைப்படம் 'கலகத் தலைவன்'. இப்படம் வரும் நவம்பர் 18ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், நேற்று சென்னையில் 'கலகத் தலைவன்' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
'கழகத் தலைவன்' ட்ரெய்லர் வெளியீட்டு விழா :
அரசியலிலும், திரையுலகிலும் மிகவும் பிஸியாக இருந்து வரும் உதயநிதி ஸ்டாலின் 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் 'கலகத் தலைவன்'. தடம், தடையறத் தாக்க, மகாமுனி உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி அடுத்ததாக இயக்கும் திரைப்படம் இதுவாகும். இப்படத்தில் நிதி அகர்வால், கலையரசன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. மகிழ் திருமேனியின் வழக்கமான ஸ்டைல் போல இதுவும் ஒரு ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது.

சைக்கோ 2 பற்றி மிஷ்கின் :
இயக்குனர்கள் மிஷ்கின், மாரி செல்வராஜ், அருண்ராஜா காமராஜ், பிரதீப் ரங்கநாதன், எம். ராஜேஷ், சுந்தர்.சி மற்றும் பலர் கலந்து கொண்ட இந்த விழாவில் பல ஸ்வாரஸ்யமான தகவல்களை பகிர்ந்தனர். இயக்குனர் மிஷ்கின் பேசுகையில் "உதயநிதி அரசியலில் பிஸியாக இருந்து வந்தாலும், சினிமாவிலும் தொடர்ந்து நடிக்க வேண்டும். 2020ம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், வெளியான சைக்கோ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இருப்பினும் சைக்கோ 2 திரைப்படம் எடுக்கும் எண்ணம் இல்லை. ஆனால் நிச்சயமாக உதயநிதியை வைத்து வேறு ஒரு படம் எடுப்பேன்" என்றார்.

காலுக்கு டூப் வைத்த இயக்குனர் :
உதயநிதி ஸ்டாலின் மேடையில் பேசுகையில் இயக்குனர் மிஷ்கினை நேரடியாகவே கலாய்த்துவிட்டார். அவர் பேசுகையில் " சைக்கோ திரைப்படத்தில் நடிக்கும் போது என்னால் முழுமையாக ஈடுபடமுடியவில்லை. அந்த சமயத்தில் தேர்தல் நெருங்கியதால், பல காட்சிகளுக்கு இயக்குனர் மிஷ்கின் டூப் வைத்து தான் காட்சிகளை எடுத்தார். படத்தை பார்த்த போது தான் இயக்குனர் மிஷ்கின் செய்த காரியம் என்று எனக்கே தெரியவந்தது.
பெரும்பாலும் மிஷ்கின் திரைப்படங்களில் கால்களுக்கு தான் அதிகமாக ஷாட்கள் இருக்கும். அதனால் டூப் வைத்து எடுப்பது அவருக்கு வசதியாக போய்விட்டது. நானும் எதையும் கண்டுக்காமல் விட்டுவிட்டேன் என மேடையிலேயே மிஷ்கினை பங்கமாக கலாய்த்தார். மேடையில் இருந்த அனைவரும் மிஷ்கின் உட்பட அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். அரசியலில் ஒரு உயர்ந்த நிலையில் இருந்தாலும் மிகவும் கலகலப்பாக இருப்பது அனைவரின் பாராட்டையும் பெற்றது.