Bigg Boss 6 Tamil : ‘எங்களுக்கு உதாரணமா நடந்துக்குங்க’ - பிக்பாஸை வம்புக்கிழுத்த தனலட்சுமி.. வைரல் வீடியோ!

Bigg Boss 6 Tamil : “நாங்கள் எப்படி உங்களுக்கு உதாரணமாக இருக்கிறோமோ, நீங்களும் எங்களுக்கு உதாரணமாக இருக்கனும்.” என்று பிக்பாஸிடம் கோபமாக தனலட்சுமி பேசினார்

Continues below advertisement

பிக்பாஸ் தொடர்பான சுவாரஸ்யமான வீடியோக்கள், இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அந்தவகையில், பிக்பாஸையே மிரட்டி பேசியுள்ளார் தனலட்சுமி.

Continues below advertisement

கடந்த வாரம் தொலைக்காட்சி டாஸ்க் நடந்தது. அதை தொடர்ந்து, பிக்பாஸ் வீடு “ கண்ணா லட்டு திண்ண ஆசையா” மற்றும் “ அட தேன் அட” என இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டது. இந்த டாஸ்க்கில், அந்த ஸ்வீட் ஸ்டால் 24 மணி நேரம் இயக்கப்பட வேண்டும் என்றும், பலகாரங்களை செய்து ஆர்டர் எடுக்க வேண்டும் என்றும் நிபந்தனைகள் வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், கல்லாவில் உள்ள பணத்தையும் பொருட்களையும் பாதுகாக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் நடந்து வரும் ஸ்வீட் ஸ்டால் டாஸ்க் முடிவடையும் நிலையில் உள்ளது. தற்போது, தனலட்சுமி கேமராமுன் சென்று, “ என்னுடைய அணியினர் என் பேச்சை கேட்டு, சிவப்பு கோட்டிற்குள் போகாமல், அவர்கள் பொருளை எடுத்து கைகளில் வைத்துள்ளார்கள். நீங்கள் அதை கேமராவில் நோட் செய்து இருப்பீர்கள். நானும் அதை அங்கிருந்து பார்த்து கொண்டு இருந்தேன். எங்கள் எதிர் போட்டி டீமில் உள்ள நபர்கள் எடுத்த 6 பொருட்கள் உள் இருந்து எடுக்கப்பட்டது. அதை ஸ்டோர் ரூம் உள்ளே நீங்கள் அனுப்பி வைத்தால், கண்டிப்பாக என் அணியினை உள்ளே அனுப்புவேன்.

நீங்கள்தான் விதிமுறைகளை பின்பற்ற சொன்னீர்கள். நானும் அதை செய்தேன். நாங்கள் எப்படி உங்களுக்கு உதாரணமாக இருக்கிறோமோ, நீங்களும் எங்களுக்கு உதாரணமாக இருக்கணும்.” என்று பிக்பாஸிடம் கோபமாக பேசினார்.இப்படி, ஒருபக்கம் அவர் கோபித்து பேசும்போது மற்ற போட்டியாளர்கள், அவரிடம் சற்று விலகியே இருக்கின்றனர்.

இதே போல் வைரலாகிய மற்றொரு வீடியோவில் தனலட்சுமி, மற்றவர்களிடம் பேச முயற்சிகிறார். அப்போது அவரை யாரும் கண்டும் காணாதது போல் உள்ளனர். தொடர்ந்து அமுது அமுது என அவர் ஏதோ பேச வருகிறார்.இந்த வீடியோவிற்கு, இணைய வாசிகள் சோகமான மியூசிக் போட்டு தனலட்சுமியை ட்ரால் செய்து வருகின்றனர்.

இப்படியாக, பிக்பாஸ் நிகழ்ச்சியும் சண்டை போடும் டாஸ்க்குகளையே தொடர்ந்து கொடுத்து வருகிறது. இந்த போட்டியாளர்களும்,அடித்துக்கொள்ளாத குறையாக தம் கட்டி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். மற்ற சீசன்களில், போக போகதான் சண்டை உண்டாகும். ஆனால் இந்த ஆறாவது சீசனில், ஆரம்பித்த நாள் முதலே இதுபோன்ற கலவரங்கள் தொடங்கியது என்பது குறிப்பிடதக்கது 

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola