சுனில் ஷெட்டி, அக்ஷய், பரேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியான ஹெரா பேரி திரைப்படத்தின் 3 ஆம் பாகத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் அது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஹீரா பேரி என்ற திரைப்படம் 2000 ஆம் ஆண்டில் இந்தியில் வெளியான திரைப்படம். இதனை இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கியிருந்தார். நீரஜ் வோரா இந்தக் கதையை எழுதியிருக்கிறார். அக்ஷய் குமார், சுனில் ஷெட்டி, பரேஷ் ராவல், தபு, ஓம் புரி, குல்ஷன் க்ரோவர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் 1989ல் மலையாளத்தில் வெளியான ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங் என்ற படத்தின் ரீமேக் ஆகும். ஹீரா பேரி சீரிஸில் இது முதல் படம். இந்தக் கதைப் படி இரண்டு வாடகைதாரர்கள் ராஜூ, ஷ்யாம் மற்றும் பாபுராவ் என்று வீட்டு உரிமையாளர் பற்றியதே இந்தப் படம். கடுமையான பணத் தட்டுப்பாட்டில் இருக்கும் பாபுராவுக்கு க்ராஸ் டாக் மூலம் ஒரு ப்ளாக் மெயில் திட்டம் தெரிகிறது. அதைப் பயன்படுத்தி அந்தப் பணத்தை எப்படி தங்களுடையதாக்கிக் கொள்வது என்று அவர்கள் திட்டமிடுவார்கள்.
இந்தப் படம் அக்ஷய் குமார், பரேஷ் ராவல் நடிப்பால் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. படம் ரூ.17.8 கோடி வசூல் செய்தது. படம் எடுக்க ரூ.7.5 கோடிதான் செலவானது. பின்னர் 2006ல் ஹீரா பேரி பார்ட் 2 வந்தது. பின்னர் இது ஒரு கல்ட் க்ளாசிக் காமெடியாகிவிட்டது. இந்தியாவின் நடுத்தரக் குடும்பங்களில் நிலவும் பொருளாதார சிக்கல்களை அழகாக எடுத்துரைக்கும் வசனங்கள், காட்சிகள், கதையமைப்பால் இந்தப் படம் வெற்றி பெற்றது. இப்போது இந்தப் படத்தின் மூன்றாம் பாகம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதுவும் அக்ஷய் குமார், சுனில் ஷெட்டி, பாரேஷ் ராவல் ஆகியோர் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் மும்பையில் இணைந்தனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த மூன்றாம் பாகத்தை ஃபர்ஹாத் பாஸ்மீ இயக்குகிறார்.
அதில் ஒரு ட்விட்டராட்டி, ஹீரா பேரி 3 மட்டும் நன்றாக எழுதி இயக்கிவிட்டார்கள் என்றால் சமீபத்திய ரெக்கார்ட் அனைத்தையும் துவம்சம் செய்துவிடும் என்று பதிவிட்டுள்ளார்.