குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலமானவர் டிடிஎஃப் வாசன். யூடியூப் பிரபலமான டிடிஎஃப் வாசன், பைக் ரேஸராக அறியப்படுபவர். காஸ்ட்லியான பைக், அதனை ஹேண்டில் பண்ணும் விதம் என்று எல்லாவற்றையும் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு பிரபலமானார். அதுவே அவருக்கு தலைவலியாகவும் மாறியது. நடு ரோட்டில் வீலிங் செய்து, பைக் விபத்தில் சிக்கியதால்  லைசென்ஸ் இழந்து கையில் காயம் ஏற்பட்டு சிறைக்கு சென்றார்.


எப்படி குறுகிய காலத்தில் பிரபலமானாரோ அதே போன்று குறுகிய காலத்திலேயே சிறைக்கும் சென்று வந்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரபலமான ஷாலின் ஷோயாவை காதலித்து வந்த டிடிஎஃப் வாசன் இப்போது குஷிதா கல்லாபு உடன் பைக்கில் வலம் வரும் வீடியோ வைரலாகி வருகிறது.




டிடிஎஃப் வாசனின் மஞ்சள் வீரன் படம் உருவாக இருந்த நிலையில் அந்தப் படத்தின் இயக்குநர் மற்றும் டிடிஎஃப் வாசன் இடையிலான பஞ்சாயத்து காரணமாக படத்திலிருந்து நீக்கப்பட்டார். சினிமா மீதான ஆசை காரணமாக இப்போது ஐபிஎல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தொடர்பான வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிடிஎஃப் வாசன் பதிவிட்டுள்ளார்.


அந்த வீடியோவில் டிடிஎஃப் வாசன் ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்ட அவருக்கு பின்னால் ஐபிஎல் படத்தின் ஹீரோயினான குஷிதா கல்லாபு அமர்ந்துள்ளார். இவர், தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார். ஹைதராபாத்தைச் சேர்ந்த குஷிதா கல்லாபு 22 வயதாகும் நிலையில் 5 படங்களில் நடித்துள்ளார்.
இப்போது ஐபிஎல் படம் மூலமாக நேரடியாக தமிழ் சினிமா பக்கம் திரும்பியுள்ளார். இயக்குநர் கருணாகரன் இயக்கத்தில் உருவாகி வரும் ஐபிஎல் படம் வரும் 2025 ஆம் ஆண்டு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 




டிடிஎஃப் வாசன் வெளியிட்ட அந்த வீடியோவில் அவர் மிகவும் பழமையான சிபிஇசட் பைக்கை ஓட்டுகிறார். கடந்த 2017 ஆம் ஆண்டிற்கு முன்பு வரை இந்த மாடல் பைக்கின் விலை ரூ.72.40 ஆயிரமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து ரசிகர்கள் பலர் உங்க காதலி ஷாலின் சோயாவை பிரேக் அப் பண்ணிடீங்களா? என கேள்வி எழுப்பி வருகிறார்.