புஷ்பா 2:


தெலுங்கு திரையுலகின் முன்னணி ன் நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் டிசம்பர் 5-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'புஷ்பா 2'. இந்த படத்தின் ரிலீசுக்கு ஒரு நாளுக்கு முன்னதாகவே இப்படத்தின் பிரீமியர் காட்சி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் திரையிட்டது. முதல் நாள் முதல் காட்சியை பார்க்க வரும் ரசிகர்களை விட அதிகமான ரசிகர்கள் பிரீமியர் காட்சியை பார்க்க திரையரங்கம் முன் திரண்டனர். அதே போல் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி, அல்லு அர்ஜுன் சந்தியா திரையரங்கிற்க்கு வந்ததால், பலர் அல்லு அர்ஜுனை பார்க்க போட்டி போட்டனர்.


ரேவதி மரணம்:


ஒருபக்கம் போலீசார் மக்கள் கூட்டத்தை கலக்க லேசான தடியடி நடத்திய நிலையில், இன்னொருபுறம் அல்லு அர்ஜுனின் பாதுகாவலர்கள் சிலரை தள்ளிவிட்டதாக கூறப்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி, அல்லு அர்ஜுனனின் புஷ்பா 2 படத்தை பார்க்க, திரையரங்கிற்கு வந்த 35 வயது ரசிகை, ரேவதி உயிரிழந்தார். மேலும் ரேவதியின் 8 வயது மகனும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.




கடந்த இரண்டு நாட்களுக்கு முன், ரேவதியின் மகன் மூளைச்சாவு அடைந்து விட்டதாக கூறப்பட்டது. எனவே மீண்டும் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தொடர்ந்து ஒருபுறம் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், ரேவதியின் மரணத்தில் அல்லு அர்ஜுன் மீது தான் தவறு உள்ளதாக, ஹைதராபாத்தில் உள்ள அவருடைய வீட்டை சில போராட்டக்காரர்கள் சூறையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


ரேவதி குடும்பத்திற்கு நிதி உதவி:


ஒரு தரப்பினர் அல்லு அர்ஜுனுக்கு எதிராக இருந்தாலும், இன்னொரு தரப்பு அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறது. இந்நிலையில் உயிரிழந்த ரேவதியின் குடும்பத்திற்கு படக்குழு சார்பில் ரூ.2 கோடி நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அல்லு அர்ஜுன் சார்பில் ரூ.1 கோடியும், தயாரிப்பாளர் சார்பில் ரூ.50 லட்சம் மற்றும் இயக்குனர் சுகுமார் சார்பில் ரூ.50 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.