தி கோட்
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த தி கோட் படம் கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியானது. விஜயின் 68-வது படமாக உருவான இப்படத்தை முழுக்க முழுக்க ரசிகர்களுக்கான படமாக உருவாக்கியிருந்தனர். விஜய் ரசிகர்கள் படத்தை கொண்டாடினாலும் பொதுவான ரசிகர்களுக்கு இப்படம் அவ்வளவாக திருப்தி அளிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
ரூ.400 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இப்படம் இதுவரை பாக்ஸ் ஆபிஸில் 400 கோடி வசூலீட்டியுள்ளது. அதிக வசூல் ஈட்டிய தமிழ் படங்களில் 4 ஆவது இடத்தை தி கோட் பிடித்துள்ளது. முதல் இரண்டு இடங்களை ரஜினியின் 2.0 மற்றும் ஜெயிலர் படம் பிடித்துள்ள நிலையில் மூன்றாவது நான்காவது இடத்தை விஜயின் லியோ மற்றும் தி கோட் பிடித்துள்ளன. ஐந்தாவது இடத்தை கமலின் விக்ரம் பிடித்துள்ளது.
மட்ட பாடலுக்கு த்ரிஷாவின் சம்பளம்
தி கோட் படத்தில் ரசிகர்களுக்கு செம விருந்தாக அமைந்தது மட்ட பாடல். த்ரிஷா இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். விஜய் மற்றும் த்ரிஷாவின் கிளாசிக் கூட்டணியில் உருவான கில்லி , திருப்பாச்சி , ஆதி ஆகிய படங்கள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன. அந்த வகையில் மட்ட பாடல் ரசிகர்களுக்கு பழைய நினைவுகளை நினைவுபடுத்தும் பாடலாக அமைந்தது.
விஜய் மற்றும் த்ரிஷா கூட்டணிக்கு ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதன் காரணத்தினால் ' மட்ட' பாடலுக்கு ஒரு பெரும் தொகையை த்ரிஷா சம்பளமாக பெற்றுள்ளார். ஒரு சில நிமிடங்கள் வந்து நடனமாடிய த்ரிஷாவுக்கு ரூ.1 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனைக் கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். அதுவும் படத்தில் நாயகியாக நடித்த சினேகாவுக்கு சம்பளமே ரூ.30 லட்சம்தான் என்கிற போது ஒரு பாடலுக்காக த்ரிஷாவுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுப்பது நியாயமா என ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
த்ரிஷா தற்போது மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். இது தவிர்த்து தெலுங்கில் சிரஞ்சீவி மலையாளத்தில் டொவினோ தாமஸ் நடிக்கும் ஐடண்டிடி ஆகிய படத்தில் நடித்து வருகிறார்
மேலும் படிக்க : Prithviraj Sukumaran : மும்பையில் அடுக்குமாடி வீடு வாங்கிய நடிகர் பிருத்விராஜ்...விலை இத்தனை கோடியா!
Sasikumar : கடன் பிரச்சனையால் தான் நடிக்க வந்தேன்...தொடர்ந்து படங்கள் இயக்காதது குறித்து சசிகுமார்