Lubber Pandhu: அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண்.. செம்ம எதிர்பார்ப்பில் லப்பர் பந்து.. இதுவா கதை?

அட்டகத்தி தினேஷ் - ஹரிஷ் கல்யாண் இணைந்து நடித்துள்ள லப்பர் பந்து படம் இருவருக்கும் திரைவாழ்வில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத்தரும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Continues below advertisement

தமிழில் வித்தியாசமான நல்ல கதைக்களம் கொண்ட திரைப்படங்களைத் தேர்வு செய்து நடிப்பவர் அட்டகத்தி தினேஷ். அதேபோல தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவர்கள் இருவரும் தற்போது நடித்துள்ள படம் லப்பர் பந்து.

Continues below advertisement

லப்பர் பந்து:

தமிழ் சினிமாவில் கிரிக்கெட்டை மையமாக வைத்து சமீபத்தில் ஏராளமான படங்கள் வெளியாகி வருகிறது. அந்த வரிசையில் லப்பர் பந்தும் வெளியாக உள்ளது. ஆனால், வித்தியாசமான கதைக்களத்துடன் இந்த படம் வெளியாக உள்ளது.

இந்த படம் வரும் 20ம் தேதி வெளியாக உள்ளது. கிராமப்புறத்தில் நடக்கும் கிரிக்கெட் கதைக்களத்துடன் காதல், குடும்ப சூழலுடன் இந்த படம் வெளியாக இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிரெதிர் அணியில் விளையாடும் தினேஷ் – ஹரிஷ் கல்யாண் இடையே ஏற்படும் மோதலே படத்தின் மையக்கருவாக அமைந்துள்ளது.

தினேஷ் - ஹரிஷ் கல்யாணுக்கு வெற்றி கிட்டுமா?

அட்டகத்தி படம் மூலமாக நாயகனாக அறிமுகமான தினேஷ் விசாரணை,  இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, ஜே பேபி என தரமான படங்களில் நடித்தாலும் அவருக்கு தரமான வெற்றி கிடைத்து சில வருடங்கள் ஆகிவிட்டது. அதேபோல, வளரும் நடிகரான ஹரிஷ்கல்யாணுக்கு பார்க்கில் படம் நல்ல வெற்றிப்படமாக அமைந்தது. ஆனால், சி சென்டர் ரசிகர்கள் வரை அவர் இன்னும் முழுமையாக சென்றடையவில்லை.

லப்பர் பந்து படத்தில் கிராமத்து இளைஞராக நடித்திருப்பதன் மூலம் அவர் கிராமத்து ரசிகர்களிடமும் மிகவும் பிரபலம் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஸ்டார் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இவர் தவறவிட்டதும் முதலில் விமர்சிக்கப்பட்டது. படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால் பின்னர் ஹரிஷ் கல்யாணை பாராட்டவும் சிலர் செய்தனர். நீண்ட காலமாக வெற்றியை எதிர்பார்த்து காத்திருக்கும் இருவரும் இந்த படத்தை மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சில்லாஞ்சிறுக்கியே பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

லப்பர் பந்து படத்தை தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தினேஷ், ஹரிஷ் கல்யாணுடன் சுவாஸ்விகா, சஞ்சனா, கீதா கைலாசம், தேவதர்ஷினி, பாலசரவணன், காளிவெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர். 

Continues below advertisement
Sponsored Links by Taboola