ஒரு கதாநாயகன் 2 டிகேட் வரையில் ரசிகர்கள் மத்தியில் அதே அந்தஸ்துடன் வலம் வரலாம் . ஆனால் ஒரு கதாநாயகி அப்படி வர முடியுமா என்ற கேள்விக்கெல்லாம்  பதிலாக அமைந்திருக்கிறார் நடிகை த்ரிஷா. கிட்டத்தட்ட 2 டிகேட் அதாவது 20 வருடங்கள் கதாநாயகி என்ற அந்தஸ்துடன் கோலிவுட்டில் வலம் வருபவர். இல்லை..இல்லை தென்னிந்திய சினிமாவிலேயே முதல் நடிகை த்ரிஷாதான். 1999 ஆம் ஆண்டு வெளியான  ஜோடி திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் அறிமுகமானார் த்ரிஷா. அதன் பிறகு 2002 ஆம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே திரைப்படம் மூலம் “தனியாவா ...பேசலாமே “ என்ற ஒற்றை வசனம் மூலம் பட்டி தொட்டி எங்கிலும் பிரபலமானார். . அதற்கு முன்னதாகவே லேசா லேசா திரைப்படத்தில் நடித்திருந்தாலும் வெளியானது என்னவோ மௌனம் பேசியதே.  அதன் பிறகு கோலிவுட்டும் த்ரிஷாவின் திறமையை பயன்படுத்த தவறவில்லை.அப்போது த்ரிஷாவிற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு , இதுநாள் வரையில் அதாவது 19 ஆண்டுகளாக கதாநாயகி என்ற அந்தஸ்தை கொடுத்து அவரை கெத்தாக வலம் வர வைத்திருக்கிறது.







 முன்னணி நடிகர்களான அஜித், விஜய் , சூர்யா , கமல் என டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துதவர் த்ரிஷா. தற்போது தனக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறது இந்த அழகு பதுமை. இந்நிலையில் அவரது 19 ஆண்டுகால நடிகை பயணத்தை சிறப்பிக்கும் வகையில் பிருந்தா (த்ரிஷா நடித்து வரும் வெப் தொடர் )  படக்குழுவினர்  மற்றும் உதவியாளர்கள் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதனை பகிர்ந்த த்ரிஷா “ஒரு அறிவாளி மனிதர் ஒருமுறை என்னிடம் சொன்னார் “உனக்கு விடுமுறையே தேவையில்லாத வேலை கிடைத்தால் அதனை செய் என்று . அதைத்தான் நான் செய்தேன் ..ஆனால் இன்னும் விடுமுறையில் இருக்கிறேன்...இந்த பயணத்தில் என்னுடன் இருந்த அனைவரையும் நான் விடமாட்டேன். நான் இப்படியாக இருக்க நீங்கள் எல்லோரும்தான் காரணம் . வாழ்வின் சிறந்த 19 வருடங்களுக்கு நன்றி “ என தெரிவித்துள்ளார்.


 






த்ரிஷாவிக்கு வெட்டிய கேக்கில் “queen of south ” என்னும் எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் எங்களுக்காக இத்தனை சிறப்பான நினைவுகளை கொடுத்தமைக்கு நன்றி “ என்ற வாசகம் அடங்கிய சீட்டு ஒன்றும் உள்ளது. கேக்கில் த்ரிஷா நடித்த படங்கள் பொறிக்கப்பட்ட புகைப்படங்கள் ஃபிலிமாக பொறிக்கப்பட்டுள்ளது. மகிழ்சியில் திளைத்து போன த்ரிஷாவை அவரது ரசிகர்கள் மேலும் பல படங்களில் கதாநாயகியாக பார்க்க வேண்டும் என்ற ஆவலையும் வாழ்த்தையும் தங்களது கமெண்டில் தெரிவித்து வருகிறனர்.