Watch Video: அடடே.. நம்ம சிம்பு, த்ரிஷாவா இது... க்யூட்டாக டான்ஸ் ஆடிய வீடியோ இணையத்தில் வைரல்..

Trisha - Simbu : சிம்பு மற்றும் த்ரிஷா இருவரும் இணைந்து க்யூட்டாக நடனமாடும் த்ரோபேக் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

Continues below advertisement

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் நடிகைகள் ரீல் ஜோடிகளாக இருந்து ரியல் ஜோடிகளாக மாறினாலும் ஒரு சில ரீல் ஜோடிகள் என்றுமே ரசிகர்களின் மனதில் ஒரு தனி இடத்தை பிடிப்பார்கள். அதில் ஒரு பெஸ்ட் ஆன் ஸ்க்ரீன் பேர் தான் நடிகர் சிம்பு மற்றும் நடிகை திரிஷா. 

Continues below advertisement

க்யூட் ஜோடி :

சிம்பு - திரிஷா  இருவரும் முதலில் ஜோடி சேர்ந்து நடித்த திரைப்படம் 'அலை'. 2003ம் ஆண்டு வெளியான இப்படத்தை விக்ரம் குமார் இயக்கி இருந்தார். அதை தொடர்ந்து 7 ஆண்டுகள் கழித்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா' என்ற ரொமான்டிக் காதல் திரைப்படத்தில் மீண்டும் இந்த ஜோடி இணைந்தனர். இப்படத்தில்  கார்த்தி - ஜெஸ்ஸியாக ரசிகர்களை இதயங்களை துளைத்தனர்.

அவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் கெமிஸ்ட்ரி அப்படத்தில் மிகவும் அற்புதமாக இருக்கும். அப்படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு வசனம், பாடல் என அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் இன்றும் ஃப்ரெஷாக இருக்கிறது. இந்த ரீல் ஜோடி ரியல் ஜோடியாக மாற வேண்டும் என்பது ஏராளமான ரசிகர்களின் விருப்பமாக இருந்தது. இந்த படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. மீண்டும் இந்த ஜோடி எப்போது இணையும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

த்ரோபேக்  வீடியோ :

இந்நிலையில் கலை நிகழ்ச்சி ஒன்றுக்காக இருவரும் இணைந்து ஆடும் வீடியோ மீண்டும் இணையத்தில் வைரலாகியுள்ளது. இதில் சிம்பு நடித்த தம் படத்தில் இடம் பெற்ற ஹிட் பாடலான 'சாணக்கியா சாணக்கியா' பாடலுக்கு நடனமாட நடிகர் சிம்புவும், த்ரிஷாவும் இருவரும் இணைந்து டான்ஸ் பிராக்டிஸ் செய்து கொண்டு இருக்கும் த்ரோபேக்  வீடியோவை சோசியல் மீடியாவில் பகிர்ந்து ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். இந்த வீடியோவை பார்த்த திரிஷா மற்றும் சிம்பு ரசிகர்கள் ஹார்டின்களை பறக்கவிட்டு வருகிறர்கள். 

ரசிகர்களின் கோரிக்கை: 

இன்றைய தலைமுறை ரசிகர்கள் இந்த த்ரோபேக் வீடியோவை பார்த்து அட நம்ம ஏ.ஜி.ஆர், குந்தவையா இது என வாய் பிளக்கிறார்கள். இருவரும் மிகவும் பிஸியாக படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் இருவரும் இணைந்து நடிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது. 


மேலும் படிக்க: Ilaiyaraaja: அவங்களுக்கு வரல; அதை நான் குறையா சொல்லல; நான் ஞானி கிடையாது! - ஓபனாக பேசிய இளையராஜா

த்ரிஷா - சிம்பு படங்கள்

கடந்த ஆண்டு நடிகை த்ரிஷாவுக்கு பொன்னியின் செல்வன் 2 , லியோ உள்ளிட்ட படங்கள் மாபெரும் வெற்றி படங்களாக அமைந்தது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிஸியாக இருக்கும் த்ரிஷா கைவசம் நான்கு ஐந்து படங்களில் நடித்து வருகிறார். 

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் 'விடாமுயற்சி' திரைப்படத்தில் நடிகர் அஜித் ஜோடியாக பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடித்து வருகிறார். 

நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'பத்து தல' திரைப்படம் நல்ல வசூலை எட்டி வெற்றி பெற்றது. தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கி வரும் STR 48 திரைப்படத்திலும், கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் படத்திலும் நடித்து வருகிறார். இப்படங்கள் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Continues below advertisement
Sponsored Links by Taboola