சான் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா முரளி நடிப்பில் ‛ட்ரிக்கர்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. நீண்ட எதிர்பார்ப்புக்கு இடையே வெளியாகியுள்ள ட்ரிக்கர், அதர்வாவுக்கு பெரிய அளவில் கை கொடுக்கும் என கூறப்படுகிறது. இந்த படத்தில் தன்யா ரவிச்சந்திரன், அருண்பாண்டியன், சின்னிஜெயந்த், அறந்தாங்கி நிஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மித்ரன் வசனத்தில், கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவில் ஜிப்ரான் இசையில் வெளியாகியுள்ள ட்ரிக்கர், தியேட்டர் வெளியீடாக வந்துள்ளது. இன்று காலை வெளியான இத்திரைப்படம் குறித்து, படம் பார்த்த ரசிகர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இதோ அந்த கருத்துக்கள்..