தமிழகத்தில் ஓப்பனிங் கிங், அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் என பல சிறப்பு முகங்களை கொண்டவர் அஜித். ரசிகர் மன்றங்கள் இல்லாமல், ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர். அஜித்தில் வெற்றி, தோல்வி பயணங்கள் சினிமாவில் பலமுறை விமர்சிக்கப்பட்டாலும், அவரது தனிநபர் குணம் பலராலும் பாராட்டப்படுகிறது. இந்நிலையில், நடிகர் அஜித் குணம் குறித்து பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார் டெலிபோன் ராஜ். 


வடிவேலு குழுவில் இருக்கும் டெலிபோன் ராஜ், அஜித் படங்களில் வடிவேலு தவிர்க்கப்படுவதற்கு காரணம் என்ன என்று இணையதள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அஜித்-வடிவேலு கூட்டணி ராஜா பாடத்திற்குப் பின் ஏன் இணையவில்லை, அதற்கு காரணம் என்ன, ராஜா படப்பிடிப்பில் நடந்தது என்ன என்பது குறித்து அவர் அளித்த பேட்டி இதோ:




 


அஜித்தை விட வடிவேலு சார் வயதில் பெரியவர். அவரை அஜித் என்று பெயர் சொல்லி கூப்பிடுவதில் தவறில்லை. ஆனால், அஜித் கொஞ்சம் ஈகோ பாத்திருக்கிறார். அஜித்தை அவரது பெயரைச் சொல்லி வடிவேலு அழைத்தது அஜித்திற்கு பிடிக்கவில்லை. ஒரு படத்தில் ஒன்றாக பணியாற்றும் போது, ஒரு நாள் ‛எப்படி இருக்கீங்க...’ என்று கூப்பிடுவோம், அப்புறம் சூட்டிங் போக போக ஒரு விதமான நெருக்கம் ஏற்படும். அதன் பிறகு பெயர் சொல்லி அழைப்பது சாதாரணமானது தான்.


அப்படி தான், வடிவேலு சார் அஜித்தை பெயரை சொல்லி அழைத்தார். அஜித்தை விட வயதான ஆள் தானே வடிவேலு. அவரை பெயரை சொல்லி அழைப்பதால் என்ன தவறு. என்னோட தலைவன் வடிவேலுவை, ஹைலைட் காமெடி மன்னன் என்பதால் தான் அந்த படத்தில் போட்டுள்ளனர். அந்த இடத்தில் ஈகோ பார்க்க கூடாது. அந்த இடத்தில் அஜித் ஈகோ பார்த்தார். அவர் ஈகோ பார்த்ததால், வடிவேலு அடுத்தடுத்த அஜித் படங்களில் நடிக்க முடியவில்லை. 






அஜித் ஒரு பப்ளிசிட்டி மன்னன். பயங்கரமான பப்ளிசிட்டி மன்னன். கொடுக்குறது யாருக்கும் தெரியக்கூடாதுனு சொல்வாங்களே, அவர் வெளியே தெரிய வேண்டும் என்றே கொடுப்பார். அது யாருக்கும் தெரியாது. அப்படி தான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். தன்னுடைய போட்டோக்கள் வெளியே வரக்கூடாது, வரக்கூடாது என கூறுவார். ஆனால், எல்லா போட்டோக்களும் வெளியே வந்துவிடும். 


அஜித் ஒரு பப்ளி சிட்டி பிரியர். எதுக்கு அவரைப் போய் பேசிட்டு. நம்ம கதையை பேசுவோம். சினிமா, அரசியலில் நிறைந்த பகைவனும் இல்லை, எதிரியும் இல்லை. சினிமாவில் எதுவும் நடக்கலாம். சினிமாவில் குட்மார்னிங் சொல்வதே நடிப்பு தான். அந்த மாதிரி, எதுவும் மாறலாம். அஜித் கூட மீண்டும் வடிவேலு நடிக்கலாம். சினிமாவில் எல்லாமே நடிப்பு தான்.