அடுத்த அன்னபூரணியாக அவதாரம் எடுத்தாரா திருச்சி சாதனா என சோஷியல் மீடியா கொந்தளித்துக்கொண்டிருக்க கண்டெண்ட் கிடைக்காமல் இதனை செய்துவிட்டேன் என்கிறார் சாதனா.


தமிழ்நாட்டில் ஆன்மிகத்தை முன்னிறுத்தும் பலர், தங்களை அம்மாவாகவே அறிமுகம் செய்து கொள்கிறார்கள். அவர்கள் அம்மா என்பது, ‛அம்மனை’ குறிக்கிறது. அம்மனுக்கு பல அவதாரம் உண்டு. இவ்வாறு வருவோரும், தங்களை அப்படி ஒரு அவதாரமாகவே கூறிக்கொள்வதும் உண்டு. அதில் சிலர், மக்களின் நன்மதிப்பை பெறுகிறார்கள். 


Sunny Leone Interview : துன்புறுத்திய கேள்விகள்.. யாருமே எனக்காக பேசவில்லை.. சன்னி லியோன் பகிர்ந்த கதை..




பலர், சர்ச்சையில் சிக்கி, சிறைகளுக்கு கூட செல்கிறார்கள். இது தமிழ்நாடு பார்த்து வரும் இயல்பான ஒன்று தான். இப்படியாக அம்மனாக அவதாரம் எடுத்து சமீபத்தில் சிக்கலில் சிக்கிக் கொண்டவர் அன்னபூரணி. ஒரே நாளில் ஒபாமாவாக மாறி பிரபலமடைந்தார் அன்னபூரணி. கடவுளாக மாறியதும், கையை தூக்கி பக்தர்களுக்கு ஆசி வழங்குவதும் என சோஷியல் மீடியாவே ரகளையாக இருந்தது. ஆனால் அடித்த அடியில் அன்னப்பூரணி அவதாரம் கலைந்துபோனது. இந்த விவகாரம் ரெஸ்ட் எடுத்த நேரத்தில் திருச்சி சாதனாவும் அம்மனாக களம் இறங்கினார். அடுத்து ஒரு அம்மனா என இணையவாசிகள் தயாராக அது கண்டெண்ட் இல்லாமல் செய்தது என சாதனாவே ஒப்புக்கொண்டுள்ளார்.


Leonardo DiCaprio | இயற்கை எச்சரிக்குது... எதுவும் செய்யாம இருந்தா இவ்வளவு பெரிய ஆபத்து இருக்கு - லியனார்டோ தரும் எச்சரிக்கை



தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வீடியோ பதிவேற்றியுள்ள சாதனா ஒரு டூப் அம்மனாக களம் இறங்கினார். ஒரு கூட்டத்தை நடிக்க வைத்து தானும் அம்மனாக நடித்து கண்டெண்டை கையில் எடுத்துள்ளார். முழு எலுமிச்சை பழத்தை கடித்து திண்பதும், கண்களை உருட்டுவதும் என தன்னை  அம்மனாகவே நினைத்துகொண்ட சாதனாவுக்கு கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. நீங்க  சாமியா என கொந்தளித்த பலருக்கும் விளக்கம் அளித்துள்ள சாதனா, '' நான் சாமியெல்லாம் இல்லை. அன்னபூரணி தான் இன்றைய ட்ரெண்டிங். அதனால் கண்டெண்ட் கிடைக்காமல் நான் அந்த வீடியோ செய்தேன். எல்லாம் நடிப்புதான். யூடியூப் தான் எனக்கு வருமானம். அதற்காக செய்யப்பட்ட வீடியோ அது என தெரிவித்துள்ளார்.



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண