ஹாலிவுட்டின் பிரபல நடிகராக இருப்பவர் லியானர்டோ டிகாப்ரியோ. மிகப்பெரிய ஆதிக்கமிக்கவராக விளங்கும் லியானாடொ டிகாப்ரியோ, சமூகம் சார்ந்த , இயற்கை சார்ந்த கருத்துகளை தனது சமூக வலைத்தள பக்கங்கள் வாயிலாகவும் , ஊடகங்கள் வாயிலாகவும் பகிர்ந்து வருகிறார். கடந்த ஆண்டு சென்னையில் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது இதனை அறிந்த லியோனர்டோ தனது சமூக வலைத்தள பக்கங்களில், " மழையால் மட்டுமே சென்னையை காப்பாற்ற முடியும். ஒரு கிணறு முற்றிலுமாக வறண்டு இருக்கிறது. சென்னை கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை சந்தித்துள்ளது. ஏரிகள் வறண்டுவிட்டன. அரசு அதிகாரிகள் இந்தத் தட்டுப்பாட்டை போக்க மாற்று வழிகளை தொடர்ந்து யோசித்து வருகின்றனர். ஆனால், சென்னை வாழ் மக்கள் மழைக்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர் “ என பதிவிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து தற்போது “ நாம் காலநிலை நெருக்கடியை எதிர்த்துப் போராடப் போகிறோம் .நாம் கடினமான அறிவியல் உண்மைகளை புரிந்துகொண்டு எதிர்கால பூமியின் நலனுக்காக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். ஆஸ்கர் நாயகனின் இந்த பதிவுகளை நாம் இயல்பாகவும் கடக்க முடியாது. இயற்கையை பாதுகாத்தால் மட்டுமே நாம் எதிர்கால அழிவுகளில் இருந்து தப்பிக்க முடியும் என்பதுதான் சமூக ஆர்வலர்களின் கருத்தாகவும் உள்ளது. அதற்காக சில வருடங்களாகவே குரல் கொடுத்து வருகிறார் லியானர்டோ. இவரின் பதிவுகள் கவனம் பெற்று வருகின்றன.சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான டோண்ட் லுக் அப் திரைப்படம் இத்தகைய சுற்றுச்சூழல் பிரச்சனைகள் அடிப்படையாக கொண்டுதான் வெளியாகியுள்ளது . சயின்ஸ் ஃபிக்சனாகவெளியான அந்த திரைப்படம் பலரின் வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் don't look up திரைப்படத்தை காணலாம். அதில் லியோனர்டோ விஞ்ஞானியாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு யூ ட்யூப் வீடியோவில், “இயற்கை எச்சரிக்குது... நம்ம எதுவும் செய்யாம இருந்தா இவ்வளவு பெரிய ஆபத்து இருக்கு. நாம் கவனிக்கிரோம். ஆனால் செயல்படவில்லை.. என சொல்லி இருக்கிறார் லியனார்டோ