ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவலால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலைவாணர் அரங்கத்தில் பேரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 5ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் என்றும், அன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உறையாற்ற உள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.


இந்நிலையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் வரும் 5ஆம் தேதி மாலை 6 மணிக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அரசின் தலைமை கொறடா கோவி.செழியன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி வரும் 5ஆம் தேதி மாலை அண்ணா அறிவாலயத்திலுள்ள கலைஞர் அரங்கில் இந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் சட்டமன்ற கூட்ட தொடர் தொடர்பாக கலந்து ஆலோசிக்கப்படும் என்று கருதப்படுகிறது. 




முன்னதாக சட்டப்பேரவை கூடுவதை தொடர்ந்து, எம்எல்ஏக்களுக்கு இன்றும்,நாளையும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. சென்னையில் இரண்டு இடங்களில் எம்எல்ஏக்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள சூழலில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கொரோனா கட்டுப்பாடுகள் ஜனவரி 10ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


புதிய கட்டுப்பாடுகளின் படி, ஜனவரி 10ஆம் தேதி வரை, அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 9 மற்றும் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் வழக்கம்போல் செயல்படும். திருமணம், திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து பொருட்காட்சிகள் மற்றும் புத்தகக் கண்காட்சிகள் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழிபாட்டுத்தலங்களில் தற்போது உள்ள நடைமுறையே தொடரும் என அறிவிக்கபட்டது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண