The Kerala Story Review: வெறுப்பு பிரச்சாரமா? உண்மை கதையா? தி கேரளா ஸ்டோரி விமர்சனம்!
பிரதமர் மோடி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், காங்கிரஸ் தலைவர் சசி தரூர் என அரசியல் தலைவர்கள் தொடங்கி நெட்டிசன்கள் வரை, திரைக்கு வருவதற்கு முன்னரே கடும் விவாதங்களைக் கிளப்பிய ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் நேற்று (மே.05) திரையரங்குகளில் வெளியானது. ஆவணப்பட இயக்குநர் சுதிப்தோ சென் முதன்முறையாக இயக்கியுள்ள முழு நீள திரைப்படமான தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில், அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சித்தி இத்னானி, சோனியா பாலானி, தேவதர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் படிக்க
17 years of Jithan : படம் என்னமோ சூப்பர் ஹிட்.. ஆனால் ஹீரோவுக்குதான் சான்ஸ் கிடைக்கல... 17 ஆண்டுகளை கடந்த 'ஜித்தன்'..!
தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகர்களாக இருக்கும் பல ஹீரோக்களுக்கு ஆரம்ப காலகட்டத்தில் பல படங்களில் வாய்ப்புகளை கொடுத்தது சூப்பர் குட் பிலிம்ஸ். அவர்களின் தயாரிப்பில் வெளியாகும் படங்கள் பெரும்பாலும் மிக பெரிய வெற்றி படங்காகவே அமைந்துள்ளன. ஜனரஞ்சகமான படங்களை எடுப்பதில் மக்களின் நம்பிக்கையை சம்பாதித்த நிறுவனம். இப்படி பல முன்னணி நடிகர்களை கொடுத்த சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஆர் பி சவுத்ரி தனது மகன் ரமேஷை அறிமுகப்படுத்திய திரைப்படம் 'ஜித்தன்'. மேலும் படிக்க
‘பொன்னியின் செல்வன் 2' மீது எனக்கு வருத்தம்’; குறைகளை அள்ளி வீசும் இயக்குநர் மோகன் ஜி
“பொன்னியின் செல்வன் கதை கல்கி அவர்கள் எழுதிய நாவலே ஒரு புனைவு என்று சொல்லி தான் வந்திருக்கிறது. அவருடைய கற்பனை கலந்த புனைவு அதைத் தாண்டி இந்த படத்தில், நிறைய புனைவுகள் இருக்கிறது என்று தான் சொல்லி இருந்தேன், அதை உடனே நான் வந்து பொன்னியின் செல்வன் படம் பிடிக்கவில்லை, நான் அதை எதிர்த்து பேசியதாக நிறைய செய்திகள் நேற்று வந்தது பார்த்தேன். அப்படி இல்லை நாம் வந்து ஒரு வரலாற்று சம்பந்தமாக நிறைய விஷயங்களை தெரிந்திருக்கும் போது, அதை தப்பாக காட்டும்போது ஒரு வருத்தம் வருகிறது” என மோகன்ஜி தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
Naga Chaitanya - Samantha: சமந்தா எப்படிப்பட்டவர்? மனம் திறந்த முன்னாள் கணவர் நாகசைதன்யா..!
நடிகை சமந்தா மிகவும் அழகான நபர் என்றும், அவர் அத்தனை மகிழ்ச்சிக்கும் தகுதியானவர் என்றும் நடிகர் நாகசைதன்யா தெரிவித்துள்ளார். டோலிவுட் சினிமாவில் காதல் பறவைகளாக வலம் வந்து கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யா - சமந்தா தம்பதி, 4 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்குப் பிறகு கடந்த 2021ஆம் பிரிய முடிவெடுத்து. விவாகரத்து பெற்றனர். மேலும் படிக்க
Kichcha Sudeep: முதுகில் குத்திய நண்பன்.. சுதீப்பிற்கு மிரட்டல் கடிதம் விடுத்த திரைப்பட இயக்குனர் கைது - ரசிகர்கள் அதிர்ச்சி
கன்னட திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழும் கிச்சா சுதீப், நான் ஈ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடத்திலும் பிரபலமானார். இப்படியான நிலையில் கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் வரும் மே 10 ஆம் தேதி நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியான நிலையில், ஏப்ரல் முதல் வாரத்தில் நடிகர் கிச்சா சுதீப் காங்கிரஸ் கட்சியின் தலைவர் டி.கே.சிவகுமாரை சந்தித்தார். தொடர்ந்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் முதலமைச்சர் பசவராஜ் பொம்மையை சந்தித்து பேசினார். மேலும் படிக்க