நடிகை சமந்தா மிகவும் அழகான நபர் என்றும், அவர் அத்தனை மகிழ்ச்சிக்கும் தகுதியானவர் என்றும் நடிகர் நாகசைதன்யா தெரிவித்துள்ளார்.


4 ஆண்டுகள் கழித்து பிரிவு


டோலிவுட் சினிமாவில் காதல் பறவைகளாக வலம் வந்து கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யா - சமந்தா தம்பதி, 4 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்குப் பிறகு கடந்த 2021ஆம் பிரிய முடிவெடுத்து. விவாகரத்து பெற்றனர்.  இந்நிலையில் மன உளைச்சல் , மயோசிட்டிஸ் பாதிப்பு என பலவற்றையும் கடந்து சமந்தா தற்போது டோலிவுட், பாலிவுட் என வரிசையாக திரைப்படங்கள், சீரிஸ்களில் நடித்து வருகிறார்.


கஸ்டடி


மறுபுறம் நடிகர் நாகசைதன்யாவும் டோலிவுட், பாலிவுட் என பிஸியாக இயங்கி வரும் நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் அவர் கூட்டணி வைத்துள்ள ‘கஸ்டடி’ திரைப்படம் விரைவில்  திரைக்கு வரவுள்ளது.


க்ரித்தி ஷெட்டி இந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள நிலையில், அரவிந்த் சாமி, சரத்குமார், பிரியாமணி, ரவி பிரகாஷ் எனப் பலரும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இளையராஜா - யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றனர்.


தற்போது கஸ்டடி படத்துக்கான ப்ரொமோஷன் பணிகளில் நாக சைதன்யா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள நாக சைதன்யா, தனது முன்னாள் மனைவி சமந்தாவுக்கு பாராட்டு மழை பொழிந்துள்ளது இருவரின் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்களை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது . 


எப்போது மரியாதை உண்டு


"ஆமாம். நாங்கள் பிரிந்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. நாங்கள் முறையாக விவாகரத்து செய்து ஒரு ஆண்டு ஆகிறது.  நாங்கள் இருவரும் எங்கள் வாழ்க்கையில் நகர்ந்து விட்டோம். என் வாழ்க்கையின் அந்தக் கட்டத்தில் எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு” எனப் பேசியுள்ளார். 


மேலும்,  தனக்கும் சமந்தாவுக்கும் இடையேயான விஷயங்களை  தேவையற்ற ஊடக வெளிச்சம் எவ்வாறு மோசமாக்கியது என்பதைப் பற்றி நாக சைதன்யா  பேசியுள்ளார். "சமந்தா அழகானவர், எல்லா மகிழ்ச்சிக்கும் தகுதியானவர். ஊடகங்கள் தலையிடும்போது ஊகிக்கும்போதுதான்தான் எங்களுக்கு இடையே வித்தியாசமான நிலை ஏற்படுகிறது. மக்கள் பார்வையில் அந்த பரஸ்பர மரியாதை பறிக்கப்படுகிறது. இது பற்றி தான் நான் மோசமாக உணர்கிறேன்" என நாகசைதன்யா தெரிவித்துள்ளார்.


தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் வரும் மே 12ஆம் தேதி சம்மர் ஸ்பெஷலாக உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.