நடப்பாண்டில் இதுவரை திரையரங்குகளில் வெளியாகி அதிக பார்வையாளர்களை பெற்ற  டாப் 10 திரைப்படங்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.


சினிமா கொண்டாட்டம்:


இந்திய மக்களின் அன்றாட பொழுதுபோக்குகளில் சினிமா தவிர்க்க முடியாததாக உள்ளது. இதன் காரணமாகவே வேற்று மொழிகளை சேர்ந்த தரமான படங்கள் கூட, மொழி பாகுபாடின்றி நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வார இறுதியிலும் நாட்டின் பெரும்பாலான மக்கள் தொகை திரையரங்குகளிலேயே பொழுதை கழிக்கின்றன.


அந்த அளவிற்கு தொடர்ந்து புதுப்புது படங்களும் வெளியாகி வருகின்றன.  இந்நிலையில் நடப்பாண்டில் திரையரங்குகளில் வெளியாகி இந்திய அளவில் அதிக பார்வையாளர்களை பெற்ற படங்கள் தொடர்பான ஆய்வறிக்கையை ஒரு தனியார் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆன்லைன் டிக்கெட் விற்பனை அடிப்படையில் இந்த ஆய்வறிக்கை உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அதில் இடம்பெற்றுள்ள முதல் 10 படங்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


10. வீர சிம்மா ரெட்டி:


தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான, வீர சிம்மா ரெட்டி திரைப்படத்தை 70 லட்சம் பேர் வரை திரையரங்குகளில் பார்த்து ரசித்துள்ளனர். இந்த திரைப்படம், 133 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


09. 2018:


ஜுட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் வெளியாகி விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்பட்ட மலையாள படம் 2018. நாடு முழுவதும் 78 லட்சம் பேர் இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்து ரசித்துள்ளனர். இந்த படம் ஒட்டுமொத்தமாக 150 கோடி ரூபாய்க்கும் அதிகாக வசூலித்ததாக கூறப்படுகிறது.


08. து ஜூத் மெய்ன் மக்கார்:


ரன்பீர் கபூர் மற்றும் ஷ்ரதா கபூர் நடிப்பில் வெளியான து ஜூத் மெய்ன் மக்கார் திரைப்படம், திரையரங்குகளில் 83 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது.


07.துணிவு: 


அஜித் குமார் நடிப்பில் வெளியாகி நடப்பாண்டு தமிழ் சினிமாவின் அதிக வசூல் பெற்ற படங்களில் ஒன்றான துணிவு, நாடு முழுவதும் திரையரங்குகளில் 94 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இப்படம் 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன.


06. வால்டர் வீரய்யா:


சிரஞ்சீவி நடிப்பில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்ற வால்டர் வீரய்யா திரைப்படம், நாடு முழுவதும் திரையரங்குகளில் 1.18 கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளது.


05. பொன்னியின் செல்வன் - 2:


வரலாற்று புனைவுக் கதையின் அடிப்படையில் பெரும் பொருட் செலவில் உருவான, பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் 1.35 கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளது.


04. வாரிசு:


விஜய் நடிப்பில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற வாரிசு திரைப்படம், நாடு முழுவதும் திரையரங்குகளில் 1.40 கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளது. இப்படம் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்ததாக கூறப்படுகிறது.


03. தி கேரளா ஸ்டோரி:


பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படம், திரையரங்குகளில் 1.57 கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளது.


02. ஆதிபுருஷ்:


பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி ரசிகர்களின் கடும் விமர்சனத்திற்கு ஆளான, பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படம் நாடும் முழுவதும் 1.69 கோடி பார்வையாளர்களை திரையரங்குகளில் பெற்றுள்ளது.


01. பதான்:


ஷாருக்கான் நடிப்பில் 5 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு வெளியான பதான் திரைப்படம், திரையரங்குகளில் 3.49 கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளது. அதோடு இந்த திரைப்படம் நடப்பாண்டில் அதிக வசூல் ஈட்டிய இந்திய படமாகவும் உள்ளது. அதன்படி இந்த படம் ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக கூறப்படுகிறது.