"தொழில்துறையை மறுசீரமைக்கும்" முயற்சியில் வருகின்ற ஆகஸ்ட் 1 ம் தேதி முதல் திரைப்பட படப்பிடிப்புகளை நிறுத்த தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது. 


கடந்த சில ஆண்டுகளாக திரையரங்கு வருவாய் குறைந்து வருகிறது என்றும், தயாரிப்புச் செலவுகள் பல மடங்கு உயர்ந்து வருகிறது என்றும் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்தது. இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக ஹைதராபாத்தில் பல தயாரிப்பாளர்கள் கூட்டங்களை நடத்தி, தொழில்துறையின் உயிர்வாழ்விற்கான விஷயங்களை சரியாக அமைக்க கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்தனர். அதன் காரணமாக ஆகஸ்ட் 1ம் தேதி முதல் படப்பிடிப்பு நிறுத்தப்படும் என தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 


இதுகுறித்து தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட செய்திகுறிப்பில், “தொற்றுநோய்க்கு பிந்தைய வருவாய் சூழ்நிலைகள் மற்றும் அதிகரித்து வரும் செலவுகள், திரைப்பட தயாரிப்பாளர்களின் சமூகமாக நாம் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளையும் தயாரிப்பாளர்கள் விவாதிப்பது முக்கியம். நமது சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துவதும், அதை உறுதி செய்வதும் நமது பொறுப்பு. ஆரோக்கியமான சூழலில் எங்கள் திரைப்படங்களை வெளியிடுகிறோம். இது சம்பந்தமாக, கில்டின் அனைத்து தயாரிப்பாளர் உறுப்பினர்களும் தானாக முன்வந்து ஆகஸ்ட் 1, 2022 முதல் படப்பிடிப்புகளை நிறுத்த முடிவு செய்துள்ளோம்” என தெரிவித்திருந்தனர். 






ஒரு வாரமாக தெலுங்குப் படங்களின் படப்பிடிப்புகளை நிறுத்துவது குறித்து விவாதம் நடந்து வருகிறது. இதையடுத்து பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு முன்வந்து படப்பிடிப்பு நிறுத்த வேண்டும் என்றும், ஓடிடி தளத்திற்கு அதிக முக்கியத்துவன் தர வேண்டும் என்றும் குறிப்பிட்டார். வசூல் இழப்பைத் தவிர்க்க, திரையரங்குகளில் வெளியான 10 வாரங்களுக்குப் பிறகுதான் OTT தளங்களில் புதிய திரைப்படத்தை வெளியிடுவது என்றும் தயாரிப்பாளர்கள் கூட்டாக முடிவு செய்துள்ளனர்.


அதிக டிக்கெட் விலை காரணமாகவும், கொரோனா பரவல் காரணமாகவும், சினிமா ரசிகர்கள் முன்பு போல் திரைப்படங்களைப் பார்க்க திரையரங்குகளுக்கு வருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, டிக்கெட் விலையை சாமானிய மக்களும் அணுக வேண்டும் என தயாரிப்பாளர்கள் கவுன்சில் முடிவு செய்துள்ளது. பொது திரையரங்குகளில் டிக்கெட் விலையை 100 ரூபாயில் இருந்து 70 ரூபாயாக குறைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், மல்டிபிளெக்ஸில் ஜிஎஸ்டியை சேர்த்து ரூ.150 முதல் ரூ.120 வரை இருக்கும் வகையில் திட்டங்கள் தயார் செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் இதற்கான விவரங்கள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண