Malaysia Vasudevan Birthday: ‛நான் போக்கிரிக்கு போக்கிரி ராஜா...’ டாப் 5 வாசு ஹிட்ஸ்!

பிரபல பின்னணி பாடகரும், நடிகரும், இசையமைப்பாளருமான மலேசியா வாசுதேவனின் 77 வது பிறந்தநாள் இன்று. அவர் இன்று நம்மிடம் இல்லை. ஆனால் அவர் விட்டுச் சென்ற பாடல்கள்... கொட்டிக்கிடக்கிறது. அதில் தரம் பிரிப்பது கடினம். இருந்தாலும் எந்நேரமும் கேட்கக்கூடிய டாப் 5 பாடல்கள் இதோ...

Continues below advertisement

1.செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா...

Continues below advertisement

‛‛கோயில் அம்மனுக்கு

சூடம் காட்டு

அத நேரில் காட்டு

அது சிரிப்பது தெரியாதோ
பூசை உன்
கையால் போட்டாச்சு
நானும் பார்த்தாச்சு
இனி எனக் அது புரியாதோ
கண்ணால் சொல்லு
மலை எடுப்பேன்
ரெண்டு கையாலே
அத வளைப்பேன்
சிரிக்காதே நாடு
பொறுக்காதே
என் மனசே கெடுதே
குயிலே மயிலே ஹோய்ய்ய்…’’
16 வயதினிலே படத்தில் இசைஞானி இசையில் பாடிய இந்த பாடல் தான், வாசு சார்பின் வாழ்வை மாற்றிய பாடல்!
 

2.தண்ணி கருத்திருச்சு.. தவளை...

‛‛மெதுவா போடுது தூரல்
அடி மேல தெளிக்குது சாரல்
மெதுவா போடுது தூரல்
அடி மேல தெளிக்குது சாரல்
ஒடம்போ எனக்கு சூடா இருக்கு
சில்லுனு தான் நெஞ்சம்
நான் சேர்ந்துக்குவா கொஞ்சம்
மத்ததுக்கா பஞ்சம்
நீ மல்லிக பூ மஞ்சம்
ரகசிய உறவிருக்கு.. நமக்கு
ஏய்.. கிட்ட கிட்ட வந்து வந்து
கட்டிக்கடி..ஈ….
அட்டைய போல்.. சட்டுனுதான்..
ஒட்டிக்கடி..ஈ..
தண்ணி கருத்திருச்சு கண்ணு
தவள சத்தம் கேட்டிருச்சு...’’

ரீமேக் செய்யும் அளவிற்கு பிரபலமான பாடல். 80களில் வீட்டு நிகழ்ச்சிகளில் ரோடியோக்களில் எங்கு பார்த்தாலும் கேட்கப்பட்ட பாடல்!

3.ஆகாய கங்கை... பூந்தேன் மலர் சூடி...

‛‛காதல் நெஞ்சில் ஹேய்.. மேள தாளம்.. ஹா 
காதல் நெஞ்சில் ஹேய்.. மேள தாளம்.. ஹா..
காலை வேளை பாடும் பூபாளம்
மானே ஏ..நீ... உன் தோளிலே...
படரும் கோடி நானே பருவ பூ தானே
பூமஞ்சம் உன்மேனி எந்நாளில் அரங்கேறுமோ..

குங்கும தேரில் நான் தேடிய தேவன்
சீதா புகழ் ராமன்
மேடை கட்டி மேளம் தட்டி
பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்...’’

தர்மயுத்தம் படத்தில் இசைஞானி இசையில் சூப்பர் ஸ்டாருக்காக வாசு சார் பாடிய இந்த பாடலை கேட்டுப்பாருங்கள்...!

4.தங்கச் சங்கிலி மின்னும்....

‛‛காவல் நூறு மீறி
காதல் செய்யும் தேவி
உன் சேலையில் பூ வேலைகள்
உன் மேனியில் பூஞ்சோலைகள்

அந்திப் பூ விரியும்
அதன் ரகசியம் சந்தித்தால் தெரியும்
இவளின் கணவு கனியும் வரையில்
விடியாது திருமகள் இரவுகள்
தங்கச் சங்கிலி...’’

வைரமுத்து வரிகளில் இளையராஜா இசைவில் வாசு-ஜானகி பாடிய டூயட். மனதை கொத்தாக பிடுங்கிச் செல்லும் பாடல்!

5.போக்கிரிக்கு போக்கிரி ராஜா...

‛‛வெத்தலைய போட்டு செவந்தது
என்னோட வாயி
ஒட்டி ஒட்டி செவந்திருக்கு
உன்னோட வாயி 

இரு உடம்பிருக்கு
ஒரு மனசு நம்மோட தானே
இனி தெனம் தெனமும்
சொகம் இருக்கும் சிந்தாத தேனே

தொட்டு தொட்டு சின்ன பொண்ண
சூடா ஆக்குற
தொந்தரவு செஞ்சு நீயும்
ஏதோ கேக்குற...’’

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், கங்கை அமரன் வரிகளில் வாசு -ஜானகி குரலில் வெளுத்து வாங்கிய பாடல்... கேட்டு, பார்த்து ஒரு முடிவுக்கு வாங்க!

 

இது போல் இன்னும் பல ஹிட் பாடல்கள் வாசு சார் வரிசையில் உள்ளது. அதையெல்லாம் பட்டியலிட பக்கங்கள் போதாது. 

மேலும் படிக்க: ‛பூங்காற்று திரும்புமா...’ வாசு சாரை பார்க்க முடியுமா...!

Continues below advertisement
Sponsored Links by Taboola