Fighter: முதல் நாளில் மட்டும் 90 ஆயிரம் டிக்கெட்கள் காலி.. மாஸ் காட்டும் ஃபைட்டர் திரைப்படம்!
ஃபைட்டர் படம் முதல் நாளில் மட்டும் முன்பதிவில் 90 ஆயிரம் டிக்கெட்களை விற்பனையாகியுள்ளது. இதில் 36,454 டிக்கெட்கள் 2D , 50,770 டிக்கெட்கள் 3D மற்றும் 6 ஆயிரம் டிக்கெட்கள் ஐமேக்ஸ் காட்சிகளுக்கு முன்பதிவாகியுள்ளன. மொத்தம் 3 கோடி ரூபாய் இதுவரை முன்பதிவில் வசூல் செய்யப் பட்டுள்ளதாக கூறப்ட்டுள்ளது. ஃபைட்டர் படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில் ஒரு லட்சம் டிக்கெட்களுக்கு மேல் முன்பதிவு ஆகும் என்று உறுதியாக எதிர்பார்க்கப் படுகிறது. மேலும் படிக்க
Ayalaan 2: வி.எஃப்.எக்ஸ் காட்சிகளுக்கு மட்டுமே ரூ.50 கோடி...பிரமாண்டமாக உருவாகும் “அயலான் 2”
அயலான் படத்திற்கு வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் அமைத்த ஃபாண்டன் எஃப்.எக்ஸ் நிறுவனம் அயலான் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு படக்குழுவுடன் போட்டுள்ள ஒப்பந்த அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் அயலான் படத்தின் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்திற்கு தங்களது நிறுவனம் முழு ஒத்துழைப்பை அளிக்கும் என்று உத்தரவாதம் கொடுத்துள்ளது.
மேலும் அயலான் படத்தின் இரண்டாம் பாகத்தில் வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் மட்டுமே முதற்கட்டமாக ரூ.50 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. படத்தின் தரத்தை மேம்படுத்த இந்த செலவு அதிகரிக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும், அப்படி நிலவும் பட்சத்தில் அது மேற்கொண்டு தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வேலைகள் அனைத்தும் ஃபாண்டம் நிறுவனத்தின் உரிமையாளர் பிஜாய் அற்புதராஜின் தலைமையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க
Nivetha Pethuraj: நடிப்பு மட்டுமல்ல விளையாட்டிலும் நான் கில்லி.. அசத்திய நிவேதா பெத்துராஜ்!
பேட்மிண்டன் போட்டியிலும் நிவேதா பெத்துராஜ் அசத்தியுள்ளார். மேலும் நடிப்பு, பிற தொழில்களில் திரைப் பிரபலங்கள் கவனம் செலுத்தி வரும் சிலர் மட்டுமே விளையாட்டில் கவனம் செலுத்தி வருவதோடு அசத்தியும் வருகின்றனர். அந்த வகையில் பேட்மிண்டன் போட்டியில் இரட்டையர் பிரிவில் பங்கேற்ற நிவேதா பெத்துராஜ் அதில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். டால்ஃபின் ஸ்போர்ஸ் மேனேஜ்மென்ட் நடத்திய இந்த பேட்மிண்டன் போட்டியில் மதுரை அணிக்காக கலந்து கொண்ட நிவேதா வெற்றி பெற்று அசத்தியுள்ளார். மேலும் படிக்க
Lal Salaam Audio Launch: கொண்டாட தயாராகுங்க.. ரஜினியின் லால் சலாம் இசை வெளியீடு பற்றி வெளியான அறிவிப்பு!
லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக வரும் ஜனவரி 26 ஆம் தேதி தாம்பரத்தில் உள்ள ஸ்ரீ சாய்ராம் கல்லூரியில் நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது. இசைப்புயல் ரஹ்மானின் கிளாசிக் பாடல்கள் மற்றும் தலைவரின் குட்டிக்கதை கேட்க தயாராகுங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
Ashok Selvan: ”மனைவி மட்டுமல்ல, எல்லாமே கொடுத்தது ப்ளு ஸ்டார் படம் தான்" - அசோக் செல்வன்!
'ப்ளூ ஸ்டார்' இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டு ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்து இருந்தனர். அப்போது மேடையில் பேசிய அசோக் செல்வன், "ப்ளு ஸ்டார் படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல் ஆனது.
வாய்ப்பு தேடி அலையும் காலத்தில் ஆறுதல் கூறி, நம்பிக்கை கொடுக்கமாட்டார்களா? என்று ஏக்கம் இருக்கும். அப்படி ஏங்கி கொண்டிருக்கும் அத்தனை பேருக்கும், ப்ளு ஸ்டார் படம், ஒரு ஆறுதல், நம்பிக்கையை கொடுக்கும் படமாக அமைந்திருக்கிறது. இந்த படத்தில் நடித்தவர்கள் எனது குடும்பத்தில் ஒருவராக இணைந்துவிட்டனர். ஏற்கனவே, இந்த படம் எனக்கு மனைவி, சகோதரர் என அனைத்து உறவையும் கொடுத்திருக்கிறது என அவர் தெரிவித்தார் .மேலும் படிக்க