நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள லால் சலாம் (Lal Salaam) படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளதாக படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 


லைகா நிறுவனம் தயாரிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்குநராக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் களமிறங்கும் படம் “லால் சலாம்”. இந்த படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஜய், விக்னேஷ், ஜீவிதா, நிரோஷா, தம்பி ராமையா, கே.எஸ்.ரவிகுமார், செந்தில், லிவிங்க்ஸ்டன், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தில் ரஜினிகாந்த் “மொய்தீன் பாய்” என்ற கேரக்டரில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் முன்னாள் இந்திய அணி கேப்டன் கபில்தேவ் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.


ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படம் வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 






இப்படியான நிலையில் லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக வரும் ஜனவரி 26 ஆம் தேதி தாம்பரத்தில் உள்ள ஸ்ரீ சாய்ராம் கல்லூரியில் நடைபெறும் என படக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இசைப்புயல் ரஹ்மானின் கிளாசிக் பாடல்கள் மற்றும் தலைவரின் குட்டிக்கதை கேட்க தயாராகுங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.