திருச்சிற்றம்பலம் ஷோபனா.. நித்யாமேனன் வீடியோவை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!

திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியான நிலையில் நித்தியா மேனன் சோபனா கதாபாத்திரத்திற்காக பெரும் பாராட்டை பெற்று வருகிறார்.

Continues below advertisement

தமிழில் மாறன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ் தனது 44-வது படமான, திருச்சிற்றம்பலம் சமீபத்தில் ரிலீஸ் ஆகியுள்ளது. அந்த திரைப்படத்தை தனுஷ் நடித்த  யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன் போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கியுள்ளார்.  இந்த படத்தை தனுஷின் படிக்காதவன், மாப்பிள்ளை படங்களை தொடர்ந்து 3வது முறையாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் நடிகைகள் நித்யாமேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷிகண்ணா, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார். கிட்டதட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் - அனிருத் கூட்டணி இணைந்துள்ளதால் பாடல்கள் அனைத்துமே சுப்பர் ஹிட் ஆனது.

Continues below advertisement


திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் : 

இந்த படத்தில் நடிகை ராஷிகன்னா அனுஷா கதாபாத்திரத்திலும், நித்தியா மேனன் சோபனா கதாபாத்திரத்திலும், நடிகை பிரியா பவானி சங்கர் ரஞ்சனி கதாபாத்திரத்திலும் அறிமுகம் செய்யப்பட்டனர். அதேபோல், நடிகர் பிரகாஷ் ராஜ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்திலும், இயக்குநர் பாரதிராஜா சீனியர் திருச்சிற்றம்பலம் கதாபாத்திரத்தில் சன் பிக்சர்ஸ் அறிமுகம் செய்தது இதையடுத்து திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியான நிலையில் குடும்பங்கள் மற்றும் இளைஞர்களின் மத்தியில் வெற்றிநடை போட்டு வருகிறது திருச்சிற்றம்பலம்.

 

திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்க்கு மக்களின் கருத்து :

படம் பார்த்த பலரும் நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு ஃபீல் குட் மூவி என பாராட்டியுள்ளதோடு, படத்தில் அனைவரது நடிப்பும் சிறப்பாக உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர். இதனால் வரும் நாட்களில் பேமிலி ஆடியன்ஸ் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் தனுஷ் உணவு டெலிவரி செய்யும் இளைஞராக நடித்துள்ளார். இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படம் ரிலீசானதை முன்னிட்டு நெல்லை மாவட்ட தனுஷ் ரசிகர் மன்ற தலைவர் காமராஜ் தலைமையிலான தனுஷ் ரசிகர்கள் ஸ்விக்கி, சொமோட்டோ  உள்ளிட்ட உணவு டெலிவரி ஊழியர்கள் 50 பேருக்கு தலா ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கினர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது. 

 


நித்தியா மேனன் சோபனாவை பார்த்தால் : 

நித்தியா மேனன் : நிஜத்தில் நித்யா மேனன் எப்படியோ அதற்கு நேர் எதிரான கதாபாத்திரம் தான் சோபனா கதாபாத்திரம். திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் திரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தனுஷுக்கு தோழியாக வரும் கதாபாத்திரம்தான் சோபனா, திருவிற்க்கு அனைத்துமே சோபனா தான் அவனுடைய தோழி, முதுகெலும்பு அனைத்துமே சோபனா கதாபாத்திரம் தான்.

திருச்சிற்றம்பலம் படம் வெளியானதற்கு பின் சோபனா கதாபாத்திரத்தில் நடித்த நித்யா மேனனுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன அந்த கதாபாத்திரத்தில் நித்யா மேனன் முழுமூச்சாக நடித்துள்ளார்.

திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியான நிலையில் நித்தியா மேனன் சோபனா கதாபாத்திரத்திற்காக பெரும் பாராட்டை பெற்று வருகிறார்.

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

 

Continues below advertisement
Sponsored Links by Taboola