Sunny Leone: என்னுடன் வேலை செய்ய ஏன் தயங்குகிறீர்கள்? ... விரக்தியில் சன்னி லியோன்

ஆபாச படங்களில் நடித்து கவர்ச்சி நடிகையாக அனைவராலும் அறியப்பட்ட சன்னி லியோன் தற்போது இந்தி, தமிழ், மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.

Continues below advertisement

தன்னுடன் நடிக்க இன்னும் திரையுலகில் சிலர் தயங்குவதாக பிரபல நடிகை சன்னி லியோன் வேதனை தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

ஆபாச படங்களில் நடித்து கவர்ச்சி நடிகையாக அனைவராலும் அறியப்பட்ட சன்னி லியோன் தற்போது இந்தி, தமிழ், மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். மேலும் தனது கடந்த கால வாழ்க்கை குறித்து அவர் பல முறை வருத்ததுடன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து கணவர், மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் அவர் தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்குவது வழக்கம். இதனாலேயே இவருக்கு ஏராளமனா ரசிகர்கள் உள்ளனர். 

இதனிடையே ஆபாச பட உலகில் இருந்து வெளியேறிய சன்னி லியோன் இந்திய திரையுலகில் கவனம் செலுத்த தொடங்கினார். அவர் 2012 ஆம் ஆண்டு பூஜா பட்டின் ஜிஸ்ம் 2 மூலம் தனது பாலிவுட் பயணத்தை தொடங்கினார். தற்போது திரையுலகில் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள சன்னி லியோன் தற்போது  இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

இதற்காக அனுராக்கிற்கு நன்றி தெரிவித்துள்ள சன்னி லியோன், இன்னும் திரையுலகில் சிலர் என்னுடன் பணியாற்றத் தயங்குகிறார்கள் என்றும்,இவர்களுடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கலாம் என்று நான் நம்புகிறேன். மேலும் இந்த படத்திற்காக ஆடிஷன் செய்ய அனுமதித்த அனுராக் மற்றும் அவரது குழுவினருக்கு நன்றி என கூறியுள்ளார். அதேசமயம் இது வாழ்க்கையை மாற்றும் சரியான தருணம் என்றும், அனுராக் போன்ற ஒரு இயக்குனருடன் பணிபுரிவது எனது கேரியரின் முழு இயக்கத்தையும் மாற்றும் என்று நான் நம்புகிறேன் எனவும் சன்னி லியோன் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement
Sponsored Links by Taboola